
வேலைக்குச் சேர்ந்தவுடன் சிறிது காலத்துக்கு ஜாலியான செலவுகள்... அப்புறம் திருமணச் செலவு.. அடுத்து பிள்ளைகள் வளர்ப்பு, படிப்பு, கல்யாணச் செலவுகள்... கூடவே இதுபோன்ற செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் வேறு... இப்படி அடுத்தடுத்த செலவுகளில் சிக்கியே மாதச் சம்பளக்காரர்களின் வாழ்க்கையும் தொலைந்துவிடுகிறது. ஒருநாள் ரிட்டயர்மென்ட் என்று வரும்போது சம்பளம் நின்று போகும்.. ஆனால், அன்றாடம் செய்து வந்த செலவுகள் மட்டும் இன்னும் பன்மடங்காகப் பெருகி நம்முன் வந்து நிற்கும்.
ஒரு சின்ன உதாரணம் பார்ப் போமா? இன்றைக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு இருமல் மருந்து 30 ஆண்டுகள் கழித்து 1,000 ரூபாயாக இருக்கும். அப்போதுதான் பலரும், ஆஹா... நம் கடைசிக் காலத்துக்கு என எதுவும் சேர்க்காமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.
தேவை திட்டமிடல்..!
30 வயதில் பொதுவான தேவைகளை விட லைஃப் ஸ்டைல் தேவைகள் அதிகமாக இருக்கும். அதாவது, பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள், ஓட்டல் சாப்பாடு போன்ற செலவுகள் அதிகமாக இருக்கும். சிலர் வாகனம் (பைக்/கார்), வீடு போன்றவற்றை வாங்குவார்கள். இதற்காக கடன் வாங்குவார்கள். நிறைய பணம் இ.எம்.ஐ.
கட்டவே சரியாகப் போகும். கூடவே அதி அத்தியாவசியமான ஆயுள் மற்றும் ஆரோக்கிய காப்பீடுகளுக்கான பிரீமியச் செலவும் இருக்கிறது. இந்தச் செலவுகளுக்கே அவர்கள் வருமானத்தின் பெரும்பகுதி போய்விடுவது உண்மைதான். என்றாலும், இளைமைப் பருவம் தொட்டே ஓய்வு காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது கட்டாயத்திலும் கட்டாயம்.
30 வயதானவர்களுக்கான முதலீடு!
சுகமான ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார். வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. - இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன் ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.
செந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு
15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு சுமார் 7% பணவீக்க விகிதம் என்று எடுத்துக் கொண்டால் 30 ஆண்டுகள் கழித்து அவர் பணி ஓய்வு பெறும் போது ஒரு மாதத்துக்கு 1,16,468 ரூபாய் இருந்தால்தான் சாமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால், அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம்
1.75 கோடியை தொகுப்பு நிதியாக கையில் வைத்திருக்க வேண்டும்!


இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட என்ன செய்வது என்று மலைக்க வேண்டியதில்லை. இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து
5,000 முதலீடு செய்து வரவேண்டும்.

40 வயதானவர்களுக்கான முதலீடு!
இந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு 40 வயதான முத்துவை ஒர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். பணி ஓய்வுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம்




50 வயதானவர்களுக்கான முதலீடு!
.jpg)




ஓய்வூதியத் தொகுப்பை அடைய முதலீட்டுத் திட்டங்கள்!
இங்கே காட்டப்பட்டுள்ள உதாரணங்களில் முதலீடு செய்தால் சுமார் 12% வருமானம் கிடைக்குமென எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பரிந்துரை செய்கிறேன்.
30+ வயதானவர்களுக்கு..!
இந்த வயதினருக்கு ஓய்வு பெற நீண்ட காலம் இருக்கிறது என்பதால் இவர்கள் தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகமாகச் செய்யலாம். இவர்கள் 70% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், 30% தொகையை பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் (எஃப்.எம்.பி) முதலீடு செய்யலாம். எஃப்.எம்.பி. என்பது குறிப்பிட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட மியூச்சுவல் ஃபண்ட். இதில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டில் எஃப்.டி.யோடு ஒப்பிடும்போது வரிக்கு பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும்.

40+ வயதானவர்களுக்கு..!
இந்த வயதினருக்கு ஓய்வு பெற 20 ஆண்டு காலம் இருக்கிறது. இவர்கள் 60-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.


50+ வயதானவர்களுக்கு..!
இந்த வயதினருக்கு ஓய்வு பெற 10 ஆண்டுகள்தான் இருக்கிறது. இவர்கள் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. 50-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஃபண்டில், தங்களின் வசதிக்கு ஏற்ப முதலீட்டைப் பிரித்து செய்து வரவும். 30+ வயதுக்காரர்கள், 40 வயதாகும் போது தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டு களில் குறைத்து கடன் சார்ந்த திட்டங்களில் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதே போல் மற்ற வயதினரும் வயதாக வயதாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டைக் குறைத்தும், கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்தும் வரவேண்டும். மேலும், ஓய்வு காலத்துக்கு 3-5 ஆண்டுகளுக்கு முன் முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஈக்விட்டி ஃபண்டுகளில் இருந்து அதிக ரிஸ்க் இல்லாத எஃப்.டி. போன்ற திட்டங்களுக்கு மாற்றுவது பாதுகாப்பானது.
இளம் வயதிலே ஆரம்பியுங்கள்..!
ஓய்வு காலமும் உல்லாச காலமாக இருக்க வேண்டும் என்றால் இளம் வயதில் இருந்தே முதலீட்டை ஆரம்பிப்பதுதான் நல்லது. ரிட்டயர் ஆகும் போது
1 கோடி கையில் இருக்க வேண்டும் என்றால் (மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆண்டுக் கணக்கில் 12 சதவிகிதம் வருமானம் கிடைத்தால்) 30 வயதுக்காரர் மாதம் சுமார்
2,860-ம் 40 வயதுக்காரர்
10,109-ம் 50 வயதுக்காரர்
43,470-ம் சேமித்தால் போதும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இடையே வித்தியாசப்படும் தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ளதைப் பார்த்தாலே 'இளமையில் சேமி’




என்பதன் அர்த்தம் புரியும்.

No comments:
Post a Comment