Saturday 11 July 2015

பழைய பைக் வாங்கும் முன்...

பழைய பைக் வாங்கப் போகிறீர்களா? அப்படியானால், நீங்கள் பழைய பைக் சம்பந்தப்பட்ட முக்கியமான சமாச்சாரங்களைத் தெரிந்துகொள்வது நல்லது.
தொழில்முறை பைக் விற்பனையாளரிடம் பைக்கை வாங்க நேர்ந்தால்...
தங்கள் ஊரின் வாகனப் பதிவு எண் இருக்கும் பைக்கை தேர்வு செய்வது நல்லது.
பைக் வாங்க செல்லும்போது, கூடுமானவரை உங்கள் நண்பர் அல்லது மெக்கானிக் ஒருவரை அழைத்துச் செல்லுங்கள்.
பைக்கின் ஆர்.சி புத்தகத்தை வைத்து பைக்கின் இன்ஜின் மற்றும் சேஸி எண்களை சரியாக இருக்கிறதா என சோதிக்கவும். ஏனென்றால், பைக் ஏதாவது சமயத்தில் விபத்து ஆகியிருக்கலாம். ஏன் சேஸியைக்கூட மாற்றி இருக்கக்கூடும். அப்படி நடந்திருந்தால், பைக்கைப் பார்ப்பதற்கும் ஓட்டுவதற்கும் நன்றாக இருந்தாலும், கம்பெனியின் ஒரிஜினல் ஃபிட்டிங் போல இருக்காது. பின்னால் பிரச்னைகள் வரலாம். ரீ-சேல் மதிப்பும் மிகவும் குறைவாக இருக்கும்.
பைக்கிலிருந்து வெள்ளை நிறப் புகை வந்தால் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். அந்த பைக்கைத் தவிர்த்துவிடுவது நல்லது.
இன்ஜின் சத்தம் மற்றும் பாடி கண்டிஷன் நன்றாக உள்ளதா என்பதை உங்கள் மெக்கானிக்கைவிட்டு பரிசோதனை செய்யுங்கள்.
பைக் வாங்கியபின், எப்படியும் ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும். அதுபோக, சில உதிரி பாகங்களை மாற்ற வேண்டியதும் வரலாம். இதையெல்லாம் யோசித்து விலையை முடிவு செய்யுங்கள்.
பைக் வாங்கியதும் முதலில் ஆர்.சி.புத்தகத்திலும், இன்ஷ¨ரன்ஸிலும் பெயர் மாற்றம் செய்வதில் தாமதம் செய்யாதீர்கள்.
சென்னையைப் பொருத்தவரை, பழைய பைக் மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறப்பது ஸ்ப்ளெண்டர் பிளஸ், பேஷன் பிளஸ், பல்ஸர், சிபிஸீ, ஸ்கூட்டி பெப் போன்ற வாகனங்கள்தான்!

No comments:

Post a Comment