Friday 3 July 2015

பெட்ரோலை மிச்சப்படுத்த வழிகள்!

முறையான பராமரிப்பு இல்லாமையாலும் சரியான ஓட்டுதல் முறை இல்லாமையாலும் எரிபொருள் வீணாக்கப்படுகிறது. இதனால், முறைப்படி ஒரு வாகனத்துக்கு ஆகும் எரிபொருள் செலவு பலமடங்கு அதிகமாகிறது. அப்படி ஆவதை சேமிக்க... இந்த 9 வழிகள்!
வேகம் (15 சதவிகித சேமிப்பு)
குறைவான வேகத்தில் சென்றாலே எரிபொருளை சேமிக்க முடியும். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்வதைவிட 50 கி.மீ வேகத்தில் சென்றால், எரிபொருள் செலவாவது குறையும்.
திட்டமிடுதல் (20 சதவிகித சேமிப்பு)
எந்த இடத்துக்குச் செல்கிறோமோ, அதைத் திட்டமிட்டு அந்த இடத்துக்கான சரியான வழியைத் தேர்ந்தெடுத்து சென்றால், 20 சதவிகித எரிபொருளைச் சேமிக்க முடியும்.
கன்ட்ரோல் (18 சதவிகித சேமிப்பு)
அடிக்கடி பிரேக், கிளட்ச் ஆகியவற்றை அழுத்தியபடி ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
எடை (15 சதவிகித சேமிப்பு)
காரின் எடையை எந்த அளவுக்குக் கூட்டுகிறோமோ, அந்த அளவுக்கு எரிபொருளும் வீணாகும். அதிக எடையுடன் செல்வதைத் தவிர்த்தாலே எரிபொருளைச் சேமிக்கலாம்.
ஏரோடைனமிக்ஸ் (27 சதவிகித சேமிப்பு)
காரின் மேற்கூரையில் பொருட்களை வைப்பதாலோ அல்லது காரின் கதவுக் கண்ணாடிகளைத் திறந்துவைத்து ஓட்டினாலோ, காரின் ஏரோடைனமிக்ஸ் பாதிக்கப்படுவதோடு காற்று மோதுவதால் காரின் வேகம் தடைபடும். இதனால், இன்ஜின் தன் வேகத்தை அதிகரிக்க வேண்டி வருவதால் பெட்ரோல் வீணாகும்.
பராமரிப்பு (8 சதவிகித சேமிப்பு)
வாகனத்தை சரியான இடைவெளியில் சர்வீஸ் செய்வதோடு, அடிக்கடி இன்ஜின் ஆயில், டயர்களில் காற்று ஆகியவற்றை சோதிக்க வேண்டும்.
எரிபொருள் (6 சதவிகிதம்)
கலப்படமில்லாத எரிபொருளை நிரப்ப வேண்டும். ஒரே வகையான எரிபொருளை நிரப்புவதே நல்லது.
எலெக்ட்ரிக்கல் (10 சதவிகித சேமிப்பு)
எலெக்ட்ரிக்கலைப் பொருத்தவரை ஏ.ஸி&யால் அதிக எரிபொருள் வீணாகும். அதுதவிர, மியூஸிக் சிஸ்டம் முதல் வைப்பர் வரை மின்சார உபகரணங்களைப் பயன்படுத்தும்போது பேட்டரியின் ஆயுள் குறையும். பேட்டரியை சார்ஜ் செய்வதே இன்ஜின்தான் என்பதால், கடைசியில் பாதிப்பு எரிபொருளுக்குத்தான்.
ஐடிலிங்க் (4 சதவிகித சேமிப்பு)
டிராஃபிக் சிக்னல்களிலோ அல்லது வேறு ஏதாவது இடங்களிலோ 30 விநாடிகளுக்கு மேல் ஒரே இடத்தில் வாகனத்தை நிறுத்த வேண்டி வந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடுங்கள்.இப்படி ஆஃப் செய்துவிட்டு ‘ஆன்’ செய்யும்போது அதிக எரிபொருள் செலவாகாது. வண்டி ஐடிலிங்கில் நிற்கும்போது மணிக்கு 1 லிட்டர் எரிபொருள் வீணாவதாக ஒரு கருத்துக் கணிப்பு கூறுகிறது!

No comments:

Post a Comment