Saturday 11 July 2015

காரைப் பராமரிக்க சம்மர் டிப்ஸ்!

வெயில், மனிதர்களுக்கு மட்டுமல்ல... கார்களுக்கும் பிரச்னையைக் கொடுக்கக் கூடியதுதான்! வெயில் காலத்தில் நம்மை ஒழுங்காகப் பாதுகாத்துக்கொள்வது மாதிரியே, பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய காரைப் பராமரிக்க வேண்டியது கட்டாயம்!
வெயில் காலத்தில் அடிக்கடி டயரில் உள்ள காற்றின் அளவைப் பரிசோதிக்க வேண்டும். ஏனென்றால், அதிக வெப்பத்தால் டயர் பிரஷர் தானாகவே கூடும். அதனால், டயர் வெடிக்கும் அபாயம் இருக்கிறது. ஆகவே, டயர் பிரஷரை செக் செய்ய மறக்காதீர்கள்!
வெயில் காலத்தில் ஆயில் மாற்றுவது, பெல்ட் சோதிப்பது அவசியம்.
வெயில் நேரத்தில் காரை வெட்டவெளியில் ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்தினால், வெப்பம் காருக்குள் ஏறும்!
வெயிலில் காரை நிறுத்திவைப்பது காரின் பெயின்ட்டை பாதிப்பதோடு, காருக்கு உள்ளே உள்ள டேஷ் போர்டு உள்ளிட்ட பிளாஸ்டிக் பாகங்களையும் பாதிக்கும்!
இன்ஜின் கூலன்ட்தான் இன்ஜினை கூலாக வைக்க உதவுகிறது. வெயில் காலத்தில் இன்ஜின் கூலாக இருக்க வேண்டியது அவசியம். அதனால், கூலன்ட் அளவு சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம்!
இன்ஜின் சூடாக இருக்கும்போது ரேடியேட்டர் மூடியைத் திறக்கக் கூடாது. கூலன்ட்டுக்குள் 'எத்திலின் கிளைக்கால்' எனும் அமிலம் இருக்கிறது. இது உடலில் பட்டால் பொத்தலே விழுந்துவிடும். அதனால், இன்ஜின் சூடாக இருக்கும்போது ரேடியட்டர் மூடியைத் திறக்கக் கூடாது!
இன்ஜின் சூடாக இருக்கும்போது, நேரடியாக ரேடியேட்டர் மீதோ இன்ஜின் மீதோ தண்ணீர் ஊற்றாதீர்கள்.
ஏ.ஸி கூலிங் சரியாக இல்லை என்றால், கேஸ் லீக்கேஜ் இருக்கிறதா என்று மெக்கானிக்கிடம் கொடுத்துப் பாருங்கள். வெயில் சீஸன் துவங்குவதற்கு முன்பு எப்போதுமே ஏ.ஸி சிஸ்டத்தை ஒரு முறை செக் செய்து கொள்வது நல்லது.
சன் ஸ்க்ரீன், விண்டோ ஷேடு ஷீட்ஸ் ஆகியவற்றை வாங்கி காருக்குள் பொருத்துவது அதிகப்படியான வெப்பத்தை காருக்குள் வரவிடாமல் தடுக்கும்!
வெயில் காலத்தில் அதிக வேகத்தில் செல்வது நல்லதல்ல. பழைய டயர்கள் என்றால், ஓவர் ஹீட்டாகி வெடிக்கும் நிலைமை வரலாம். அதனால், வெயில் காலத்தில் குறைந்த வேகத்தில் செல்வது நல்லது!

No comments:

Post a Comment