Friday 3 July 2015

பைக் ஓட்டுதல் - வாங்க... பழகலாம்!

புதிய பைக் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுநர் பயிற்சி, பைக் பராமரிப்பு, சாலைப் பாதுகாப்பு என ஒரு பயிற்சிப் பள்ளி கற்றுத்தரும் எல்லா விஷயங்களையும் சொல்லித்தருகிறது ஹீரோ ஹோண்டா நிறுவனம். இதன் திருப்பூர் டீலரான சிட்டி மோட்டார்ஸ§க்குச் சென்றோம். சேஃப்ட்டி அட்வைஸரான டெல்லி கணேஷ், ‘வாங்க பழகலாம்’ என நம்மை அழைத்து சில டிப்ஸ்கள் தந்தார். இதோ நம் வாசகர்களுக்காக...
 
ஹேண்டில்பாரை நேராக வைத்து கிளட்ச்சும் பிரேக் ஒயர்களும் சரியாகவும் பயன்பாட்டுக்குச் சுமுகமாகவும் இருக்கின்றனவா எனப் பார்க்கவும். பிரேக் பிடிக்கும்போது, ஆக்ஸிலரேட்டரை முறுக்காதபடி வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, கிளட்ச்சை அழுத்தி, முன் பிரேக்கை மிதமாகப் பிடித்து, பின் பிரேக்கை அழுத்த வேண்டும். மேடு பள்ளங்களில் செல்லும்போது, கால்களை ஃபுட்ரெஸ்ட்டில் ஊன்றி, சிறிது எழுந்து பேலன்ஸ் செய்ய வேண்டும்.
இவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பது, வாகனப் பாதுகாப்புக்கும் ஓட்டுநரின் ஆயுளுக்கும் பெரிதும் உதவும் என்கிறார், டெல்லி கணேஷ்!

No comments:

Post a Comment