Friday 3 July 2015

ஆயில் பற்றி ஆறு...!

இன்ஜின் இயங்க
எரிபொருள் எவ்வளவு முக்கியமோ, அது போல இன்ஜின் சீராக இயங்க ஆயிலும் முக்கியம். ஆயிலை முறையாக மாற்றாவிட்டாலோ அல்லது இதன் தன்மையைப் பரிசோதிக்காமல்விட்டாலோ காரின் இன்ஜின் இயங்காமல் 'சீஸ்' ஆகி, பர்ஸை பலமாகப் பதம் பார்த்துவிடும். எனவே, ஆயில் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
செய்யக்கூடாதவை
1. இன்ஜினில் ஆயிலின் இருப்பு குறைந்தபட்ச அளவைவிட குறைவாக இருந்தால்,
ஏற்கெனவே பயன்படுத்திய பிராண்ட் ஆயில் இல்லாமல் வேறு பிராண்ட் ஆயிலை ஊற்றி, நிரப்பக் கூடாது.
2. சமதளமற்ற சாய்வான தரையில் வாகனம் நின்றிருக்கும்போது, ஆயில் அளவைப் பரிசோதித்தால் அது தவறாகத்தான் இருக்கும்.
3. குறைந்தது ஐந்து மணி நேரமாவது இன்ஜின் இயங்காமல் இருந்தால்தான் ஆயில் அளவு சரியாகத் தெரியும். எனவே, அதற்கு முன்பு ஆயில் அளவைப் பரிசோதிக்கக் கூடாது.
4. அங்கீகாரமில்லாத கடைகளில் ஆயில் வாங்காதீர்கள்.
5. ஆயில் மாற்றும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பிராண்ட் ஆயிலைப் பயன்படுத்தக் கூடாது.
6. விலை குறைவு என்ற காரணத்துக்காகப் போலி ஆயிலைப் பயன்படுத்தக் கூடாது.
செய்ய வேண்டியவை
1. வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைக்கும் ஆயில் நிறுவனங்களின் பட்டியலும் ஆயில் கிரேடும் 'ஓனர்ஸ் மேனுவ'லில் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை மட்டுமே பயன்படுத்துங்கள்.
2. வாகனம் குறிப்பிடப்பட்ட கி.மீ ஓடியதும் ஆயிலை மாற்றத் தாமதிக்காதீர்கள்.
3. ஆயில் இருப்பைக் காட்டும் கேஜில் குறைந்தபட்ச அளவைவிட கீழிறங்காமல் இருக்கிறதா என்பதை அடிக்கடி உறுதிசெய்துகொள்ளுங்கள்.
4. ஆயில் மசகுத் தன்மையை அடிக்கடி பரிசோதியுங்கள்.
5. ஆயில் வாங்கும்போது கேன்களில் சீல் அல்லது ஹாலோகிராம் உள்ளதா என்பதைப் பார்த்து வாங்குங்கள்.

No comments:

Post a Comment