'கார் என்பது போக்குவரத்துக்கு. பைக்ஸ் இதயத்துக்கு!' - வெளிநாடுகளில் மோட்டார் சைக்கிளை இப்படித்தான் வர்ணிக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் இதைத்
தலைகீழாகத்தான் வாசிக்க வேண்டும். இங்கே போக்குவரத்துக்குத்தான் பைக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், பைக்குகளின் விற்பனை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. நம் நாட்டில் மாதந்தோறும் 3,450 கார்கள் விற்பனையானால், 19,800 மோட்டார் சைக்கிள்கள் சராசரியாக விற்பனையாகின்றன.
பைக் ஆசை, 18 வயது இளைஞன் துவங்கி 60 வயது பெரியவர் வரை அனைவருக்குமே இருக்கிறது. கல்லூரி மாணவனுக்கு, பைக் என்பது ஸ்டைலாகவும் வேகமாகவும் பறக்க வேண்டும். அன்றாடம் அலுவலகத்துக்கு சென்று வருபவருக்கோ பர்ஃபாமென்ஸ், மைலேஜ், விலை என மூன்றுமே முக்கியம். ஆனால், 40 வயதைக் கடந்தவர்களுக்கு முதுகு வலி, கை வலி உள்பட பர்ஸ§க்கும் வலியை ஏற்படுத்தாத பட்ஜெட் பைக் வேண்டும். யார் என்ன பைக் வாங்க வேண்டும்... எந்த பைக் வாங்கக் கூடாது?
பைக் வாங்குவதும் கார் வாங்குவதைப் போலத்தான். உங்கள் தேவையைப் பொறுத்துத்தான் தீர்மானிக்க வேண்டும். விலை, மைலேஜ், பர்ஃபாமென்ஸ் இந்த மூன்றில் எது உங்களுக்கு முக்கியமோ... அதுதான் நீங்கள் வாங்கப் போகும் பைக்கை முடிவு செய்யும். வெளிநாடுகளில் உள்ளது போல நமக்கு பைக் மாடல்கள் நிறைய இல்லை. கிட்டத்தட்ட 50 பைக்குகள்தான் நம் நாட்டில் விற்பனையில் உள்ளன. இதில், உங்களுக்கான பைக்கை சுலபமாகத் தேர்ந்தெடுக்கலாம். வாங்க... உங்க பைக்கைத் தேடலாம்!
பிராண்ட் மற்றும் நம்பகத்தன்மை!
பொதுவாக கார்களைவிட பைக்கை அதிக ஆண்டுகளுக்குப் பயன்படுத்துவோம். அதனால், நாம் வாங்கும் பைக் அதிக ஆண்டுகளுக்கு உழைக்க வேண்டும் என்பதால், மோட்டார் சைக்கிளின் பிராண்ட் மிக மிக முக்கியம். மார்க்கெட்டில் நீங்கள் வாங்க இருக்கும் பைக்கைத் தயாரிக்கும் நிறுவனத்தின் நன்மதிப்பும் அதன் நம்பகத்தன்மையும் எப்படி இருக்கின்றன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
பைக்குகளை எப்படியும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டியிருக்கும். அதனால், சம்பந்தப்பட்ட பைக் நிறுவனத்தின் சர்வீஸ் தரம் எப்படி என்பதும் முக்கியம். சில பைக்குகளின் உதிரி பாகங்கள் விலை அதிகமாக இருக்கும். ஆனால், அவை நீண்ட காலத்துக்கு உழைக்கும். சில பைக்குகளின் உதிரி பாகங்கள் விலை குறைவாக இருக்கும். ஆனால், அடிக்கடி பழுதடையும். அதனால் பைக் வாங்கும்போதே அதன் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களின் விலை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக மட்டுமே ஒரு பைக்கை வாங்கிவிடாதீர்கள். அவற்றின் சர்வீஸ், பராமரிப்புச் செலவுகளையும் கவனத்தில் வையுங்கள்.


யாருக்காக?
நகருக்குள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயணம் செய்ய விரும்புகிறவர்களுக்காகத் தயாரிக்கப்படுகிறது.


கிட்டத்தட்ட இந்த வகை பைக்குகளின் மைலேஜ் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒவ்வொரு பைக்குகளுக்கும் இடையே பர்ஃபாமென்ஸிலும் சின்னச் சின்ன வித்தியாசங்கள்தான். ஸ்டைல்தான் எக்ஸிக்யூட்டிவ் பைக்குகளை வேறுபடுத்திக் காட்டுகிறது. அதனால், பைக்கின் ஸ்டைல் உங்களுக்குப் பிடித்திருந்து, சீட்டிங் பொசிஷன், சஸ்பென்ஷன் ஆகியவையும் உங்கள் சௌகரியத்துக்கு ஏற்றபடி இருந்தால், இந்த செக்மென்ட்டில் ஒன்றை உடனடியாக டிக் செய்யுங்கள்.
யாருக்கு?
ஸ்டைல், பர்ஃபாமென்ஸ், மைலேஜ் என மூன்றுமே எதிர்பார்ப்பவர்களுக்காகத் தயாரிக்கப்படுகிறது.




யாருக்காக?
குறைந்த விலையில் ஸ்டைலான பர்ஃபாமென்ஸ் பைக்குகளை எதிர்பார்ப்பவர்களுக்கானது!


யாருக்காக?
அடிக்கடி ஊர் சுற்றக் கிளம்பும் சுற்றுலாப் பிரியர்களுக்கானது!


யாருக்காக?
நெடுஞ்சாலைகளிலும், ரேஸ் டிராக்கிலும் சீறிப் பறக்க விரும்புகிறவர்களுக்கானது!


யாருக்காக?
ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்கள் பொதுவாக பெண்கள் பயன்படுத்துவதற்காகவே தயாரிக்கப்படுகின்றன.


யாருக்காக?
விலையை மறந்துவிட்டு நகருக்குள் ஜாலியாகச் சுற்றி வர விரும்புபவர்களுக்கானது!



பைக் எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டு இருக்கிறது; எப்போது ரிஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும் கவனியுங்கள்.






டயல்கள் சரியாக வேலை செய்கிறதா?
இன்ஸ்ட்ரூமென்ட் டயல்களைப் பாருங்கள். ஸ்பீடோ, ஓடோ மீட்டர் டயல்கள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். ப்ரீமியம் செக்மென்ட் பைக்குகளில் டிஜிட்டல் மீட்டர்கள் ஒழுங்காக வேலை செய்கிறதா என்று பாருங்கள். சைடு ஸ்டாண்ட் எச்சரிக்கை விளக்கு இருந்தால், சைடு ஸ்டாண்டைப் போட்டுப் பாருங்கள். ஹெட் லைட் சரியாக எரிகிறதா என்றும் பாருங்கள்.
சுலபமாக உட்கார முடிகிறதா?
சீட்டில் வசதியாக உட்கார்ந்து பாருங்கள். இரண்டு கால்களையும் தரையில் வைத்து பைக்கை பேலன்ஸ் செய்ய முடிகிறதா என்று பாருங்கள். பைக் ஒரே பக்கமாகச் சாய்கிறதா என்று கவனியுங்கள். புதிய பைக்காக இருந்தாலும் டெஸ்ட் டிரைவ் செய்யும்போதோ அல்லது யார்டில் இருந்து கொண்டு வரும்போதோ கீழே விழுந்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
இன்ஜின் கடமுடா....
இன்ஜினை ஆன் செய்தவுடன் இன்ஜினில் இருந்து வித்தியாசமான சத்தம் ஏதாவது வருகிறதா என்று கவனியுங்கள். கடமுடா சத்தம் ஏதாவது எழும்பினால், பைக்கில் பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். உடனே அதை டீலரிடம் சொல்லிவிடுங்கள்.
ஸ்டீயரிங்கை வளைத்துத் திருப்பி ஓட்டலாம்!
ஹேண்டில் பாரை சுலபமாகத் திருப்பி ஓட்ட முடிகிறதா என்று பாருங்கள். கிளட்ச், பிரேக் ஆகியவற்றையும் பிடித்துப் பாருங்கள். அனைத்து கியர்களுக்கும் மாற்றி பைக்கை ஓட்டுங்கள். கியர்களை மாற்றும்போது வித்தியாசமான சத்தம் வருகிறதா அல்லது உடனே கியர் மாறாமல் சிக்கல் செய்கிறதா என்றும் கவனியுங்கள்.
நியூட்ரலுக்கு வர முடிகிறதா?
கியரில் இருந்து நியூட்ரலுக்குச் சுலபமாக வர முடிகிறதா என்று பாருங்கள். சடர்ன் பிரேக் அடித்துப் பாருங்கள். பிரேக்கில் இருந்து ஏதாவது சத்தம் வருகிறதா என்றும் கவனியுங்கள்.

பைக் கடன் வாங்கும்போது ப்ரீமியம் தொகையை அதிகமாகச் செலுத்திவிட்டு, இரு ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பி செலுத்திவிடுவது நல்லது.
பைக்குகளின் விலை பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாறிக் கொண்டே இருக்கிறது. மேலும், நீங்கள் வாங்கும் பைக்கில் டீலர்கள் ஏதும் டிஸ்கவுன்ட் தருகிறார்களா என்று விசாரியுங்கள். பொதுவாக பைக்விற்பனையில் லாபம் குறைவுதான் என்றாலும், பணமாக டிஸ்கவுன்ட் தருவதற்குப் பதில், உதிரி பாகங்களுக்கு சில டீலர்கள் டிஸ்கவுன்ட் தருவார்கள். இது பற்றிக் கேளுங்கள். நீங்கள் வாங்கப் போகும் பைக்கில் புது மாடல்கள் ஏதும் வரப் போகிறதா என்றும் விசாரியுங்கள். உதாரணத்துக்கு, பஜாஜ் பல்ஸர் 180 புதிதாக வெளிவரப் போவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே பழைய ஸ்டாக்கை வேகமாக விற்றுவிட வேண்டும் என்று டீலர்கள் கவனமாக இருப்பார்கள். இதனால், நீங்கள் கொஞ்சம் அதிகமாக டிஸ்கவுன்ட் கேட்டாலும் கொடுத்துவிடுவார்கள். அதனால், உங்களுக்குப் பழைய மாடல் வேண்டும் என்றால் மட்டுமே வாங்குங்கள். இல்லையென்றால் இரண்டு வாரம் அல்லது ஒரு மாதம் பொறுத்திருந்து புதிய பைக்கையே வாங்குங்கள்.
அதேபோல் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பைக் வாங்கும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள். டிசம்பர் மாதத்தில் பொதுவாக பைக்குகளுக்கு டிஸ்கவுன்ட் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டுக்கான மோட்டார் சைக்கிள்களை உடனே விற்றுவிட வேண்டும் என்பதால்தான் இந்த டிஸ்கவுன்ட் மழை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பழைய ஆண்டின் மாடல்கள் அப்படியே ஸ்டாக் இருந்தால் ஜனவரியிலும் டிஸ்கவுன்ட் தொடரும். நீங்கள் கடந்த ஆண்டு மாடலைத்தான் வாங்க விரும்புகிறீர்கள் என்றால், அதன் விலையை மேலும் குறைக்கச் சொல்லுங்கள்.
பைக் கடன்
கார்களைப் போன்று பைக்குகளுக்கு இப்போது நிதி நிறுவனங்கள் அதிகம் கடன் தருவதில்லை என்பதால், கடன் வாங்கி பைக் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இப்போது 40 சதவிகிதத்தினர் தான் கடன் மூலம் மோட்டார் சைக்கிள்களை வாங்குகின்றனர். பஜாஜ் தனது நிறுவனமான பஜாஜ் ஆட்டோ ஃபைனான்ஸ் மூலமும், யமஹா தனது பூஸான் ஆட்டோ ஃபைனான்ஸ் மூலமும் கடன் தருகிறது. இது தவிர ஹீரோ ஹோண்டா, ஹோண்டா, டிவிஎஸ் உள்ளிட்ட மற்ற பைக் நிறுவனங்கள் சில தனியார் நிறுவனங்கள் மூலம் கடன் வழங்குகின்றன. ஐசிஐசிஐ இரண்டு சக்கர வாகனங்களுக்குக் கடன் தருவதை நிறுத்தி வைத்திருக்கிறது.
எஸ்பிஐ, கனரா வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளிடம் இருந்து கடன் வாங்குபவர்கள் மிகவும் குறைவு.
பைக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலம் 1, 2 அல்லது 3 ஆண்டுகள் வரை இருக்கும். வட்டி விகிதம் ஆண்டுக்கு ஏற்ப பொதுவாக 6.5 சதவிகிதத்தில் இருந்து 11 சதவிகிதம் வரை போகிறது.
பைக் கடன் வாங்கும்போது ப்ரீமியம் தொகையை அதிகமாகச் செலுத்திவிட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் கடனைத் திருப்பிச் செலுத்திவிடுவது நல்லது. அப்போதுதான் நீங்கள் திருப்பிச் செலுத்தும் தொகை பைக்கின் விலையைவிட மிகவும் அதிகமாக இருக்காது.

இந்தியாவில் கார் மற்றும் மற்ற வாகனங்களால் நடைபெறும் விபத்துகளைவிட மோட்டார் சைக்கிள் விபத்துகள் 21 சதவிகிதம் அதிகம். அதில் குறிப்பாக, தமிழகத்தில்தான் அதிக விபத்துகள் நடப்பதாக புள்ளி விவரம் ஒன்று எச்சரிக்கிறது. தினமும் குறைந்தபட்சம் 9 பேர் மரணமடைவதாகவும், ஆறு பேர் பலத்த காயமும், தினமும் இருவர் சிறு காயங்களுடன் தப்பிப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இதில் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் நடக்கும் உயிரிழப்புகள்தான் 90 சதவிகிதம். அதனால், பைக் வாங்குகிற ஒவ்வொருவருமே முதலில் வாங்க வேண்டியது ஹெல்மெட். பைக்கில் பயணிக்கும்போது எப்போதுமே ஹெல்மெட்டைத் தலையில் அணிந்து செல்லுங்கள். ஹெல்மெட்டை அலட்சியப்படுத்தாதீர்கள். உயிர் காக்கும் விஷயம் இது!

















No comments:
Post a Comment