Friday 3 July 2015

பைக் தகவல்கள்

சோதனை மேல் சோதனை!
பெட்ரோலில் கலப்படம் செய்யப்படுவதைக் கேள்விப்பட்டு இருப்போம். அதைக் கண்டுபிடிப்பதற்காகவே நடமாடும் ஆய்வுக்கூடம் இருக்கிறது. இந்த வாகனம் நேரடியாக பெட்ரோல் பங்க்குக்கே சென்று பெட்ரோல்-டீசல் மாதிரிகளைச் சேகரித்து கண்ணெதிரிலேயே சோதனை செய்யும். கலப்படம் இருப்பது தெரியவந்தால், அந்த பெட்ரோல் பங்க் சீல் வைக்கப்பட்டுவிடும். எவ்வாறு ஆய்வு நடத்துகிறார்கள் எனப் பார்ப்போம்.
100 மி.லி பெட்ரோலை 'டிஸ்டிலேஷன் அப்பாரட்டஸ்' (Distillation Apparatus) என்ற கருவியில் செலுத்தி, வெப்பப்படுத்துகிறார்கள். ஆவியாகும் பெட்ரோலை நீர் நிறைந்த கண்டெண்ஸருக்குள் செலுத்திக் குளிர்விக்கிறார்கள். ஆவி நிலையில் இருக்கும் பெட்ரோல் மீண்டும் திரவ நிலையை அடையும்போது நிறமிழந்து தண்ணீர் போல வெளிவருகிறது. வெப்ப நிலையை மெள்ள மெள்ள அதிகரித்து ஒவ்வொரு வெப்ப நிலையிலும் வெளிப்படும் பெட்ரோலின் தன்மையையும் அளவையும் குறித்துக்கொள்கிறார்கள். தரமான பெட்ரோலாக இருந்தால் சோதனை முடிவுகள் இந்திய தரக் கட்டுப்பாட்டுத் துறையினர் (Bureau of Indian Standard) வரையறை செய்துள்ள அளவுகளின்படி அமையும். அவ்வாறில்லாமல் கூடியோ குறைந்தோ வந்தால், கலப்படம் என்று அர்த்தம்.
கலப்பட டீசலைக் கண்டறிய 'விஸ்காசிட்டி பாத்' (Viscosity Bath) என்ற சோதனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு திரவத்துக்கும் அதன் பிசுபிசுப்புத்தன்மையும், ஒழுகும்தன்மையும் வேறுபட்டதாய் அமைந்துள்ளது. 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு சூடேற்றப்பட்ட டீசல், விஸ்கா மீட்டருக்குள் (Visco Meter) ஒழுக எவ்வளவு நேரமாகிறது என்று கணக்கிடுவார்கள். அது வரையறை செய்துள்ள நேரத்துக்குக் கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தால் கலப்படம் என்று பொருள்!
சரியா? தவறா?
1 மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதைவிட, 45 - 55 கி.மீ-க்குள் சென்றால் கணிசமான எரிபொருளைச் சேமிக்க முடியும்.
2 காலையில் வாகனத்தை இயக்கும்போது 3 நிமிடங்களாவது ஆக்ஸிலரேஷன் தர வேண்டும்.
3 இறக்கமான சாலையில் நியூட்ரலில் அல்லது இன்ஜினை ஆப் செய்துவிட்டு இறங்கினால் எரிபொருளைச் சேமிக்க முடியும்.
4 பெட்டி, படுக்கைகளை காரின் கூரை மீது வைத்துச் செல்வதே சிறந்தது.
5 பிரேக்குகள் ஈரமானால் அவை உலரும் வரை காரை நிறுத்திவிட்டுக் காத்திருங்கள்.
6 காரை அடிக்கடி கழுவுவதன் மூலம் அதன் ஆயுட் காலத்தைக் கூட்டலாம்.
7 கார் டயர்களின் நடுப்பகுதி மட்டும் விரைவில் தேய்ந்தால், நீங்கள் அதிக அளவு காற்றை நிரப்புகிறீர்கள் என அர்த்தம்.
8 சூடான இன்ஜினைக் குளிர்விக்க இன்ஜின் இயங்கும்போதே கூலன்டை ரேடியேட்டரில் நிரப்ப வேண்டும்.
9 காரின் ஷாக் அப்ஸார்பர்கள் சரியாக இல்லை என்பதற்கு அறிகுறி, சக்கரங்களில் பிளே அதிகமாக இருக்கும்.
10 நேரான சாலையில் செல்லும்போது ஒரே பக்கமாக இழுத்தால், வீல் அலைன்மென்ட் சரியாக இல்லை என்று பொருள்.
11 குளிர்காலத்தைத் தவிர மற்ற அனைத்து சமயங்களிலும் காரை சுலபமாக ஸ்டார்ட் செய்ய முடியும்.
12 மிக விரைவாக அதிக தூரம் சென்றால், பேட்டரி செயலிழந்துவிடும்.
13 ஒரு பேட்டரியின் ஆயுட்காலம் உத்தேசமாக 18 மாதங்கள்.
14 பேட்டரியில் நீரின் அளவு குறையும்போது அமிலத்தை நிரப்பலாம்.
15 வெப்ப அளவு குறையக் குறைய பேட்டரியின் செயல் திறன் குறையும்.
16 காரின் இக்னீஷன் அனைத்து எலெக்ட்ரிகல் உபகரணங்களையும் இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
17 காரின் இண்டிகேட்டர் சரியாக ஒளிரவில்லை என்றால் இக்னீஷன் சுவிட்ச் பழுதடைந்திருக்கலாம்.
18 காரில் இருந்து வெளியேறும் புகை மாசு அளவு கார் உற்பத்தியாளர், எரிபொருள் நிறுவனங்கள் ஆகியோரின் கைகளில்தான் இருக்கிறது.
19 பை-மெட்டாலிக் ஸ்பார்க் பிளக்குகள் மற்ற பிளக்குகளைவிட சிறந்த மைலேஜ் கொடுக்கும்.
20 ரேடியல் டயர்களை உபயோகித்தால் எரிபொருள் விரயமாகும்.
(விடைகள் கீழே)
எது சரி? ஏன்?
1 சரி.
காரை ஓட்டுவதற்கான சிறந்த வேகம் மணிக்கு 45 - 55 கி.மீ.
2 தவறு.
குளிர்ந்த இன்ஜினை இயக்கச் சரியான வழி,முதலில் மிக மெதுவாகச் சென்று, பின்னர் வேகத்தைக் கூட்டுவது.
3 தவறு.
இவ்வாறு செய்யும்போது காரின் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். இது போன்ற சமயங்களில் எரிபொருள் சேமிப்பது சாமர்த்தியம் அல்ல... ஆபத்து. கட்டுப்பாடான வேகத்தில் கியரைத் தேர்வு செய்து ஆக்ஸிலரேஷன் கொடுக்காமல் ஓட்டுவதே சரி.
4 தவறு.
எதிர்க் காற்று வீசும்போது கூரை மீது வைக்கப்படும் பெட்டி படுக்கைகளால், கார் திணறும். இதனால் எரிபொருள் விரயமாவது நிச்சயம்.
5 தவறு.பிரேக்குகளை உலர வைக்க, மெதுவான வேகத்தில் பிரேக் பெடலை அழுத்தி அழுத்திவிட வேண்டும். அப்போது பிரேக் டிரம் சூடேறி உலர்ந்துவிடும்.
6 சரி.
உங்கள் காரைக் கழுவுவதால் ரசாயனக் கழிவுகளிலிருந்தும் துருப் பிடிப்பதிலிருந்தும் அதனைக் காப்பாற்றலாம்.
7 சரி.
டயர்களில் காற்றின் அளவைச் சரியாக வைப்பதன் மூலம் பல்லாயிரம் கி.மீ-க்கள் அதிகமாக உபயோகிக்கலாம்.
8 சரி.
இன்ஜின் மிகவும் சூடாகிவிட்டால் இது மிக மிக அவசியம். குளிர்ந்த நீரை அப்படியே ஊற்றினால் இன்ஜின் பழுதடைந்துவிடும். எனவே இன்ஜின் இயங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், ரேடியேட்டரில் கொஞ்சம் கொஞ்சமாக நீர் ஊற்ற வேண்டும்.
9 தவறு.ஷாக் அப்ஸார்பர்கள் சரியாக இயங்கவில்லை என்பதற்குச் சிறந்த அறிகுறி, காரை பிரேக் பிடித்து நிறுத்தியவுடன் அங்குமிங்குமாக அசைந்தாடும்.
10 சரி.
ஆனால், வீல் அலைன்மென்ட்டைச் சோதிக்கும் முன்பு டயர்களில் காற்றின் அளவு சரியாக இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்துகொள்ளுங்கள்.
11 தவறு.
குளிர்காலத்துக்கு இணையாக மழைக் காலத்திலும் இன்ஜின் இயங்கத் தாமதமாகும். ஏனென்றால், காற்றில் உள்ள ஈரப்பதம் சிலிண்டருக்குள் செல்வதால் தீப்பிடிப்பது தாமதமாகும்.
12 தவறு.
ஒரு பேட்டரி செயலிழப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அதில் தவறான ஆல்டர்னேட்டர், தளர்வான பேன் பெல்ட், பூஞ்சை பிடித்து அரித்துப்போன கேபிள், டெர்மினல்கள், நீண்ட காலம் பயன்படுத்திய பேட்டரி போன்ற பல விஷயங்கள் உள்ளன. ஆனால், வேகமாகச் செல்வதால் பேட்டரிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
13 தவறு.
ஒரு பேட்டரியின் ஆயுட்காலம் ஏறத்தாழ 24 மாதங்கள்!
14 தவறு.
பேட்டரியில் உள்ள நீரின் அளவு குறைவதற்கு அது ஆவியாவதே காரணம். அதனால், டிஸ்டில்டு வாட்-டரை மட்டுமே நிரப்ப வேண்டும்.
15 சரி.
27 டிகிரி வெப்ப நிலையில் முழுத்-திறனுடன் இருக்கும் பேட்டரி, ஜீரோ டிகிரியில் 65 சதவிகிதமாக திறன் குறைகிறது.
16 தவறு.
இக்னீஷன் சுவிட்சின் வேலை பேட்டரியில் இருந்து மின்சாரத்-தை எடுத்து ஸ்டார்ட்டர் மோட்-டாரை இயக்குவது மட்டுமே, பிற உபகரணங்களை இயக்கு-வதற்கு அல்ல!
17 தவறு.
இண்டிகேட்டர் சரிவர இயங்க--வில்லை என்றால், தவறான மின் இணைப்பு, பழுதடைந்த சுவிட்ச், ப்யூஸ் ஆன பல்ப் எனப் பல காரணங்கள் இருக்-க-லாம். ஆனால், இதற்கும் இக்னீ-ஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
18 தவறு.
இன்ஜினை டியூன் செய்து வைத்-திருப்-பது, கார்புரேட்டரையும் இன்ஜெக்-டார்களையும் சரிவரப் பராமரிப்பது ஆகியவற்றால் மாசினைக் கட்டுப்-படுத்தலாம். அது உங்கள் கைகளில்-தான் இருக்கிறது.
19 சரி.
பை-மெட்டாலிக் ஸ்பார்க் பிளக்குகள் 1.5 சதவிகிதம் அதிக மைலேஜ் தருகிறது. அத்துடன் குறைந்த அளவு புகையை வெளியிடுகிறது.
20 தவறு.
ரேடியல் டயர்கள் எரிபொருள் தேவையை 3.7 சதவிகிதம் குறைக்-கிறது. அதுமட்டுமின்றி, டயரின் ஆயுளைக் கூட்டுவதுடன் சொகுசான பயண அனுபவத்தையும் தருகிறது.

No comments:

Post a Comment