Friday 3 July 2015

கோடை கால கார் டிப்ஸ்...

வெயில் காலம் தொடங்கிவிட்டது. முதலில் காரை முழுவதுமாக சர்வீஸ் செய்துவிடுவது நல்லது. டயர்கள் தேய்ந்த நிலையில் இருந்தால், அதை மாற்றிவிடுங்கள். பிரேக் ஆயில், இன்ஜின் ஆயில், ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட் என அனைத்தையும் சரியாக இருக்கிறதா என கவனியுங்கள்.
'எமர்ஜென்சி கிட்' தேவை!
கார் பயணத்தின்போது, நடுவழியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், சமாளிப்பதற்குத் தேவை-யான முக்கிய உதிரி பாகங்களைத் தனியாக ஒரு பையில் வைத்துக் கொள்ளுங்கள்.
பயணத்தைத் திட்டமிடுங்கள்!
உங்கள் பயணத்தை முன்-கூட்டியே தீர்மானித்துவிடுங்கள். நெடுந்தூரம் செல்வதென்றால் எந்த வழி சுலபமானது என்பதை முடிவு செய்த பிறகு, காரை எடுங்கள். பயணத்தின்போது இடைவெளிவிடுங்கள். இது காருக்கும், உங்களுக்கும் 'ரெஸ்ட்'டாக இருக்கும்.
பொருட்களைத் திணிக்கக் கூடாது!
காருக்குள் பொருட்களை அடைத்து வைத்துவிடாதீர்கள். கதவுகள், கண்ணாடிகளைச் சுலபமாக மூடி திறக்கும் அளவுக்குப் பார்த்துக் கொள்ளுங்-கள். பயணத்தின்போது அடிக்கடி தேவைப்படும் பொருட்-களை மட்டும் உங்கள் அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
சீட் பெல்ட் முக்கியம்!
நெடுந்தூரப் பயணத்தின்போது டிரைவர் மட்டுமல்ல, காருக்குள் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது முக்கியம். குழந்தைகளை எக்காரணம் கொண்டும் முன் சீட்டில் உட்காரவைக்கக் கூடாது. அவர்களை காருக்குள் தனியாக இருக்கவிட்டுச் செல்லாதீர்கள்.
ஏ.ஸியை கவனி!
வெயில் காலத்தைப் பொறுத்தவரைக்கும் காருக்குள் ஏ.ஸி இருப்பது நல்லது. பயணத்தைத் துவங்குவதற்கு முன் ஏ.ஸி ஒழுங்காக வேலை செய்கிறதா என்று கவனியுங்கள்.
இன்ஜின் அதிகம் சூடானால்!
இன்ஜின் அதிகம் சூடானால், காரை ஓரமாக நிறுத்திவிட்டு காரை கொஞ்ச நேரம் ஐடிலிங்கிலேயே ஓடவிடுங்கள். எக்காரணம் கொண்டும் இன்ஜினை ஆஃப் செய்துவிடாதீர்கள். அதேசமயம், ஏ.ஸி-யை அணைத்துவிட்டு கண்ணாடிகளை இறக்கிவிடுங்கள். இன்ஜினிலிருந்து புகை வந்தால் காரை ஆஃப் செய்யுங்கள்.
புகையோ அல்லது சத்தமோ நிற்கும் வரை பானெட்டைத் திறக்காதீர்கள். ரேடியேட்டரில் கூலன்ட் சரியான அளவில் இருக்கிறதா என்று பாருங்கள். எக்காரணத்தைக் கொண்டும் இன்ஜின் சூடாக இருக்கும்போது ரேடியேட்டர் மூடியைத் திறக்க முயற்சிக்காதீர்கள். ஏனென்றால், ரேடியேட்டருக்குள் 100 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூலன்ட் கொதித்துக்கொண்டு இருக்கும்!

No comments:

Post a Comment