Friday 3 July 2015

கார் டிரைவிங் - மழைக் கால டிப்ஸ்...

 முதலில் பார்க்க வேண்டியது பிரேக். டிஸ்க் பிரேக் என்றால், அதன் கேலிப்பர்களைச் சோதிப்பது அவசியம். பழைய, துருப்பிடித்த கேலிப்பர்கள் ஒழுங்காக வேலை செய்யாமல் இருக்கும் அபாயம் இருக்கிறது. டிரம் பிரேக் என்றால், பிரேக் ஷூ தேய்மானத்தைச் சோதிப்பது முக்கியம்!
 கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், எலெக்ட்ரிகல் சிஸ்டம். விலை குறைவாகக் கிடைக்கும் ஒயர்களை மியூஸிக் சிஸ்டத்துக்கோ அல்லது வேறு ஏதாவது பயன்பாட்டுக்கோ பொருத்தாதீர்கள். ஏனென்றால், மழைக் காலத்தில் நீரில் நனையும் இந்த மின்சார ஓயர்கள் மிகுந்த அபாயத்தை உண்டாக்கும். அதனால், ஒயர்கள் அனைத்தையும் சரியாக இன்சுலேட் செய்யப்பட வேண்டும்!
 வைப்பர்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்று பாருங்கள். வைப்பர் பிளேடுகளை மழைக் காலத்துக்கு முன் புதிதாக மாற்றிவிடுவது நல்லது. விண்ட் ஸ்கிரீன் வாஷரில் எப்போதுமே தேவையான அளவு சாதாரண அல்லது டிடெர்ஜெண்ட் கலந்த நீர் இருப்பது நல்லது. வைப்பர்கள் உடைந்து இருக்கிறதா என்றும் பார்த்துக்கொள்ளுங்கள். உடைந்த வைப்பர்கள் கண்ணாடிகளில் கீறல்களை ஏற்படுத்தும்!
 நீர் தேங்கிய பள்ளத்தைக் கடந்தவுடன், ஆக்ஸிலரேட்டரில் கால் வைத்தவாறு பிரேக் பெடலின் மீது லேசாக காலைவைத்து அழுத்தி அழுத்தி எடுங்கள். அப்போதுதான் நனைந்த பிரேக் உலரும். பிரேக்கை அழுத்தும்போது வழுக்காமலும் பிரேக் வேலை செய்யும்!
 வாகனத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் இண்டிகேட்டர்களும் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்று சோதியுங்கள். குறிப்பாக, பிரேக் லைட் மற்றும் பனி விளக்குகளைச் சரி பார்க்கவும். காரணம், பலத்த மழை பெய்யும்போது சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்குத் தெரியாது. அப்போது, பிரேக் லைட்டும், இண்டிகேட்டர் விளக்குகளும், பனி விளக்குகளும்தான் நம்மைக் காப்பாற்றும்!
 கூடுமானவரை டயரில் சேறு ஓட்டாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். காரணம், டயரில் சேறு படிந்தால் பிரேக் பிடிக்கும்போது வழுக்கும். மேலும், கார் நிலையாகச் செல்லாது. எனவே, மழைக் காலத்தில் டயர் டிரெட்டின் (பட்டன்கள்) அடர்த்தி, குறைந்தது 2 மி.மீ இருக்க வேண்டும். அதே போல், சாலையில் நீர் தேங்கி நின்றால், மேடு பள்ளம் எங்கு இருக்கிறது என்று கண்டுபிடிப்பது கடினம். அதனால், அனைத்து டயர்களிலும் (ஸ்பேர் வீல் உட்பட) காற்றின் அளவு சரியாக இருப்பது அவசியம். ஏனென்றால், மழைக் காலத்தில் பஞ்சர் ஆகும் வாய்ப்பு அதிகம். காரில் சேறு படிந்து, அப்படியே விட்டுவிட்டால், துருப்பிடித்துவிடும்!
 நெடுஞ்சாலைகளில் செல்லும் பேருந்துகள் மற்றும் லாரிகளில் பின்பக்க விளக்குகள் ஒளிர்வது அபூர்வம். மேலும், அவர்கள் இண்டிகேட்டர் விளக்குகளை போட்டுவிட்டுத்தான் அடுத்த ‘லேனு‘க்கு மாறுவார்கள் என நாம் எதிர்பார்ப்பதும் தவறு. அதனால் பாதுகாப்பான முறையில் ( Defencive driving ) வண்டியை ஓட்டுவதே நல்லது!

No comments:

Post a Comment