.gif)
கரன்ட் ஷாக் அடிச்சு யார் உணர்ந்திருக்காங்களோ இல்லையோ, கரன்ட் பில்லைப் பார்த்து ஷாக்கடிச்சு விழுந்தவங்க ஏராளம்! ஓலை விசிறியும் குண்டு பல்ப்புமா இருந்த வாழ்க்கையா இன்னைக்கு இருக்குது! டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கம்ப்யூட்டர்னு ஐயிட்டங்கள் பெருகிக்கிட்டே போக, கரன்ட் பில்லும் எகிறிக்கிட்டே போகுது. பழையபடி ஓலை விசிறிக்கு இனிமே போக முடியாது. ஆனா, குறைந்தபட்சம் மின்சாரத்தை அளவா செலவழிக்கிறது எப்படிங்கிற விஷயமாவது தெரிஞ்சா, கணிசமான பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதுக்கு என்னென்ன செய்யணும்?
கணக்கு முக்கியம்!
ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு இவ்வளவு ரூபாய்னு நமக்கு பில் போடுது மின்சார வாரியம். ஒரு யூனிட் அப்படிங்கிறது எப்படி கணக்கிடப்படுதுன்னு தெரிஞ்சாதான் மின்சாரத்தை எப்படிச் சேமிக்கலாம்ங்கிறதும் புரியும். 1,000 வாட்ஸ் பல்ப் ஒரு மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். அதுவே 500 வாட்ஸ் பல்ப்னா ரெண்டு மணி நேரம். 40 வாட்ஸ் பல்ப் 25 மணி நேரம் இயங்கினா அது ஒரு யூனிட். ஆக, நாம வாங்குற அல்லது பயன்படுத்துற ஒவ்வொரு மின்சாதனத்தையும் ஒரு நாளைக்கு எத்தனை மணி பயன்படுத்துவோம், அதுக்கு எத்தனை வாட் மின்சாரம் செலவு ஆகும்ங்கிற விஷயத்தை மனசுல உள்வாங்கினாலே போதும், கரன்ட் பில் சரசரனு தானாவே குறைய ஆரம்பிச்சிடும்.
ஸ்டார் ரேட்டிங்!

ரெஃபிரிஜிரேட்டர்!

ஃப்ரிட்ஜை அடிக்கடி திறந்து மூட வேண்டாம். உள்ளே வைக்கும் ஒவ்வொரு பொருளையும் அப்படியே வைக்காமல், ஒரு பையில போட்டு மூடி வையுங்கள். மூடாம அப்படியே வச்சா ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
சூடான பொருளை அப்படியே உள்ளே வைக்க வேணாம். அது சாதாரண வெப்பநிலைக்கு வந்த பிறகு உள்ளே வைக்கவும்.

ஃபிரிட்ஜை சுவரோட ஒட்டி வைக்காம குறைந்தபட்சம் 20 சென்டி மீட்டராவது தள்ளி வைக்கலாம். இப்படி வைக்கிறதால சூடான காற்றை சுலபமாக வெளியேற்ற முடியும். சுவரை ஒட்டி வைத்தால் சூடான காற்றை வெளியே தள்ள அதிக சக்தி தேவைப்படும். இந்த அதிக சக்திதான் அதிக மின்சாரம்.
ஏ.சி.!

ரூமோட ஈரப்பதத்தை (humidity) குறைவாவே வச்சிருக்கணும்.
ரூம் கதவு ஜன்னல்களில் ஓட்டை இல்லாமல் பார்த்துக் கொள்ளணும். ஓட்டை இருந்தா வெளியிலிருந்து சூடான காற்று வரும் பட்சத்தில், அறையை குளுமையாக்க கூடுதல் மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவுக்கு ஏற்றமாதிரிதான் ஏ.சி.யை செலக்ட் பண்ணணும். பெரிய ரூமுக்கு குறைந்த டன் ஏ.சி. போட்டால் அதிக மின்சாரம் தேவைப்படும்.
அறையின் அளவு ஏ.சி. யின் அளவு
100 சதுர அடி வரை 1 டன்
100 முதல் 150 சதுர அடி வரை 1.5 டன்
150 சதுர அடிக்கு மேல் 2 டன்
வாட்டர் ஹீட்டர்!

பல்ப்!

படிக்கும் போது ரூம் முழுவதற்கும் வெளிச்சம் தர்ற மாதிரி பெரிய விளக்குகளை பயன்படுத்துறதைவிட டேபிள் விளக்குகளைப் பயன்படுத்த லாம். 40 வாட் டியூப் லைட்களைவிட 36 வாட் ஸ்லிம் டியூப்களை பயன் படுத்தலாம்.
அயர்ன் பாக்ஸ்!
தினமும் ஒவ்வொரு துணியா அயர்ன் பண்ண வேண்டாம். மொத்தமா ஒரு வாரத்துக்குத் தேவையான துணிகளை எடுத்து அயர்ன் செய்யவும்.
மின்விசிறிகள்!

No comments:
Post a Comment