ப. சிதம்பரம் மட்டுமல்ல... மாதச் சம்பளக்காரர்கள் பலரும் வீட்டில் பற்றாக்குறை பட்ஜெட்தான் போடுகிறார்கள். இருக்கிற சம்பளத்தில் வாழ்க்கையைச் செம்மையாக நடத்துவதற்கு செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருந்தாலே போதும். அந்த வித்தைதானே கைக்குச் சிக்க மறுக்கிறது என்கிறீர்களா... கீழே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்... உங்கள் மார்க் என்ன என்பதைப் பார்த்துவிட்டு எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை முடிவுசெய்து கொள்ளுங்கள்!
சென்னையைச் சேர்ந்த சார்ட்டட் அக்கவுன்ட்டன்ட் முரளீதரன் நாணயம் விகடன் வாசகர்களுக்காக வீசும் கேள்விகளுக்கு பதில் கொடுங்கள். இதோ கேள்விகள்...
1) குடும்பம், ஆரோக்கியம், கல்வி, போக்குவரத்து, கடன், சேமிப்பு, பாதுகாப்பு போன்றவற்றுக்கான செலவுகளில் உங்கள் முக்கியத்துவம் எதற்கு இருக்கிறது?
அ) முதல் மூன்று மட்டும்
ஆ) முதல் ஐந்து மட்டும் இ) அனைத்தும்
2) நிச்சய செலவுகளான கல்வி, இன்ஷூரன்ஸ், பண்டிகை போன்றவற்றுக்கான பணத்தேவையை சமாளிக்க எதில் கை வைப்பீர்கள்?
அ) சேமிப்பு ஆ) கையிருப்பு பணம்
இ) நண்பர்களிடம் கடன்/வங்கி லோன்
3) மருத்துவம், விபத்து போன்ற எதிர்பாராத செலவுகளுக்கு உங்கள் ஆயுதம்..?
அ) கிரெடிட் கார்ட்
ஆ) மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இ) கடன்
4) மாத வருமானத்திலிருந்து பணத்தை எப்படிச் சேமிக்கிறீர்கள்?
அ) வங்கி ஆ) மியூச்சுவல் ஃபண்ட்
இ) பங்கு முதலீடு
5) போனஸ் அல்லது அதிக வருமானம் வரும்போது எப்படிச் செலவழிப்பீர்கள்?
அ) பொருட்கள் வாங்குவது ஆ) சேமிப்பு/முதலீடு இ) கடன் அடைப்பது
6) அவசரத் தேவைக்காக சேமிப்பில் கைவைத்த பிறகு, மீண்டும் அந்தப் பணம் சேரும்வரை எந்த செலவுகளைத் தவிர்ப்பீர்கள்?
அ) சினிமா, ஓட்டல், பொழுதுபோக்கு ஆ) தனிப் பட்ட செலவுகள் இ) எதையும் தவிர்ப்பதில்லை
7) மாதச் சம்பளத்தை மீறி, செலவுகள் அதிகமாகும்போது எப்படிச் சமாளிப்பீர்கள்?
அ) கூடுதல் வருமானம் பார்ப்பது
ஆ) செலவுகளைக் கட்டுப்படுத்துவது
இ) கிரெடிட் கார்ட்
8) உங்கள் நிகர வருமானத்தில் கிரெடிட் கார்டின் மூலம் செலவழிக்கும் தொகையின் சதவிகிதம்...?
அ) 30% ஆ) 20% இ) 10%
9) வரவு செலவு கணக்குகளைத் தினமும் எழுதி வைப்பீர்களா?
அ) அவ்வப்போது
ஆ) கணக்கு பார்ப்பதில்லை
இ) அனைத்துச் செலவுகளையும் எழுதுவது
10) உங்கள் நிகர வருமானத்தில் கடன்களைத் திருப்பித்தர எவ்வளவு ஒதுக்குகிறீர்கள்..?
அ) 30% ஆ) 40% இ) 50%
இந்தக் கேள்விகளுக்கான உங்கள் பதில்களுக்கு என்ன மதிப்பெண்கள் என்பதை இங்கே சரிபார்த்துக்கொள்ளுங்கள்!
மதிப்பெண்கள்
22 முதல் 30 வரை மதிப்பெண் வாங்கியிருந்தால் நீங்கள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்து, திட்டமிட்டுச் செலவு செய்வதில் வல்லவர்கள். உங்களால் முறையாகச் சேமித்து, முதலீடு செய்து எதிர்கால வாழ்க்கையை வளமானதாக மாற்றிக்கொள்ள முடியும். எப்படிப்பட்ட செலவுகள் வந்தாலும் அதைத் திறமையாகச் சமாளித்து வெற்றி பெறமுடியும். எல்லா பணத்தேவைகளையும் கடன் வாங்காமல் சமாளித்து வாழ்க்கையில் முன்னேறமுடியும். இந்தக் கட்டுப்பாட்டைத் தொடருங்கள்.
15 முதல் 21 வரை மதிப்பெண்கள் வாங்கியவர்களே, கொஞ்சம் கவனம் தேவை. வரவுக்கு மீறிய செலவுகள், உங்களைக் கடனாளியாக்கிவிடும். இப்போது சரி செய்தாலும் மீண்டு வரமுடியும். எனவே, வரவு-செலவு கணக்குகளை எழுதும் பழக்கம் இல்லாதவராக இருந்தால் எழுதிப் பழகுங்கள். அது உங்கள் வெட்டிச் செலவுகளை வெளிச்சம் போட்டு உங்களைச் சரியான பாதைக்குத் திருப்பும்.
இலக்குகளைத் தீர்மானித்து திட்டமிட்டு சேமிக்கவும்வேண்டும். அவை மட்டுமே எதிர்வரும் செலவுகளையும், அவசரத் தேவைகளையும் சமாளித்து முன்னேறமுடியும். இதனைத் தொடர்ந்து செய்யும்போது மட்டுமே எதிர்காலத்தில் சிக்கல் இல்லாமல் வாழமுடியும். இல்லை என்றால் சம்பாதிக்கும் பணமெல்லாம் வட்டி கட்டுவதற்கே போய்விடும்.
15-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறீர்களா... ஆபத்தான கட்டத்தில் இருக்கிறீர்கள். வருமானம் மற்றும் செலவுகள் பற்றி அக்கறை இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விஷயம். இன்றைய நாள் பிரச்னை இல்லாமல் இருந்தால்போதும் என்ற மனநிலையில் இருக்கிறீர்கள். அதற்காக கடன் வாங்கிக் குவிக்கவும் தயங்காமல் இருக்கிறீர்கள். இந்தப் போக்கு ஆபத்தில் முடிந்துவிடும். கூடுதல் வருமானம், சேமிப்பு இல்லாமல், செலவு செய்வது தவறு. உடனே, நல்ல நிதி ஆலோசகரை அணுகுங்கள். கூடுதல் வருமானத்துக்கும் செலவுகளைக் குறைத்து சேமிப்புக்கும் வழி தேடுங்கள். மீதமுள்ள வாழ்க்கையை அடிப்படையில் இருந்து திட்டமிட்டு ஆரம்பிப்பது நல்லதுதானே!
No comments:
Post a Comment