Friday, 3 July 2015

கார் வாங்க 10 கட்டளைகள்!

ணம் செலுத்தி காரை புக் செய்துவிட்டோம். இரண்டு வாரம் கழித்து டெலிவரி எடுக்க ஷோரூம் செல்கிறோம் என்றால், முதலில் கவனிக்க வேண்டியவை என்னென்ன? இதோ செக் லிஸ்ட்
பகல் நேரத்தில் காரை டெலிவரி எடுப்பதே நல்லது. இருட்டான நேரத்தில் காரை டெலிவரி எடுக்கும்போது காரில் கீறல் அல்லது ஏதாவது கோளாறோ இருந்தால், கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
காரைச் சுற்றிலும் பாடி பேனல்களையும், கண்ணாடிகளையும் கவனியுங்கள். காரின் கார்னர்களைக் கவனமாகப் பாருங்கள்.
காரை வாங்கும் முன் ஏதாவது ரிப்பேர் செய்யப்பட்டு இருக்கிறதா? என்று கேளுங்கள். ஏனென்றால், புது கார் என்றாலும் பேக்டரியில் இருந்தோ அல்லது டீலரின் ‘யார்ட்’டில் இருந்தோ காரை
கொண்டுவரும்போது, ஏதாவது அடிபட்டு சரிசெய்யப்பட்டு இருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஏதாவது அடிபட்டு இருந்தால், அதை டெலிவரி நோட்டில் எழுதி கையெழுத்து வாங்கிக்கொள்ளுங்கள். பிறகு, அதை டீலரிடம் கொடுத்து சரி செய்துவிடுங்கள்.
காரின் உள்ளே டேஷ்போர்டும், பேப்ரிக்சும் ஒன்றாக இருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், சில நேரங்களில் காரின் டேஷ்போர்டும், பேப்ரிக்சும் சரியாகப் பொருந்தாமல் இருக்கும். அப்படி இருந்தால், அது தயாரிப்பாளரின் குறைபாடு. அதைச் சரிசெய்து கொடுக்கச் சொல்லுங்கள்.
காரில் நீங்கள் கூடுதலாகக் கேட்ட ‘ஆக்ஸஸரிஸ்’ அனைத்தும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். நீங்கள் டெலிவரி எடுக்கும்போது ‘புல் டேங்க்’ எரிபொருள் கேட்டிருந்தால், அது நிரப்பப்பட்டிருக்கிறதா? என்றும் பாருங்கள்.
காரில் றிஞிமி PDI (Pre Delivery Inspection) ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள். சர்வீஸ் புக்கிலும் இதே ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும்.
காருக்கு இரண்டு சாவிகள் கொடுத்திருக்-கிறார்களா என்றும் பாருங்கள். காருக்கான ரெஜிஸ்ட்ரேஷன், ஆர்.சி புக் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்றும் சரி பார்த்து-விடுங்கள்.
காரை டெலிவரி எடுக்கும் முன்பு விற்பனையாளரிடம் டிக்கியைத் திறப்பது எப்படி, ஏ.ஸி ஸ்விட்ச், அலாரம், சிக்னல்கள் என காருக்குள் இருக்கும் விஷயங்களை ஒரு முறைக்கு இரண்டு முறை கேட்டுத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.
கடைசியாக காரை டெலிவரி எடுக்கும் முன், இன்ஷ¨ரன்ஸ் பேப்பர்கள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளுங்கள். இன்ஷ¨ரன்ஸ் பேப்பரில் இன்ஜின் எண் மற்றும் சேஸி எண் சரியாகக் குறிக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள். ஏனென்றால், முதல் முறை இன்ஷ¨ரன்ஸ் செய்யும்போது வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் இருக்காது என்பதால், இவை அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்!

No comments:

Post a Comment