Saturday, 11 July 2015

சர்வீஸுக்கு யாரிடம் செல்வது நல்லது?

பைக்கை சர்வீஸ் செய்ய சரியான இடம் எது? தனியார் வொர்க் ஷாப்பா? அல்லது அல்லது அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரா?
'அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் பில்லைத் தீட்டி விடுகிறார்கள். இன்னொரு பக்கம் பைக்கை சர்வீஸ் கொடுப்பதற்கே அப்பாயின்ட்மென்ட் எல்லாம் வாங்க வேண்டும்' என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
'தனியார் வொர்க் ஷாப் என்றால், தரமற்ற உதிரி பாகங்களை மாட்டி விடுவார்களோ என்ற அச்சம் எப்போதும் மிச்சமிருக்கும். நேரத்தையும், பணத்தையும் கணக்குப் பார்த்தால் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பது யார்?' என்ற கேள்வியையும் கூடவே எழுப்புகிறார்கள்.
பைக் வைத்திருக்கும் சிலரிடம் இந்த இரண்டு இடங்களின் சாதக பாதகங்களைப் பட்டியலிடச் சொன்னோம். இதோ அந்த விபரம்...
வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றவர் என்பதற்காக டீலரிடம் செல்கிறோம். இங்கு, நாம் வாடிக்கையாளர் என்பது வாகனத்தின் பிராண்டுக்கு மட்டுமே! டீலருக்கு அல்ல. உதாரணம், ஒரு டீலர் சரியில்லை என்றால், அடுத்த டீலரிடம் சென்று விடுவோம். அதே நிறுவனத்தின் புதிய வாகனம் வாங்கும்போதுகூட, எந்த டீலர் குறைந்த விலைக்குக் கொடுக்கிறாரோ, அந்த டீலரிடம் சென்றுவிடுவோம்.
தனியார் வொர்க் ஷாப்புக்குச் செல்வதே மெக்கானிக்கின் பரிச்சயமும், தனிப்பட்ட கவனிப்பும், நீண்ட நாள் பழக்கமும்தான் காரணங்கள். மெக்கானிக் ஏதாவது தவறு செய்தால், சட்டென்று அவரின் உறவைத் துண்டித்துக்கொண்டு வேறிடம் செல்வது கிடையாது. ஏனென்றால், அவர் செய்த தவறைச் சுட்டிக்காட்டிச் சரிசெய்ய வழி உண்டு.
வாகனத்தின் பிராண்டையே மாற்றும்போது, டீலரின் உறவு முற்றிலும் துண்டிக்கப்படுகிறது. ஏனெனில், புதிய டீலரிடம் சென்றுவிடுகிறோம். அதேபோல், டீலரே வேறு பிராண்டுக்கு மாறிவிட்டாலும் இதே நிலைமைதான்.
எந்த பிராண்டை மாற்றினாலும் நமது வழக்கமான மெக்கானிக்கிடம் சர்வீஸ் செய்ய முடியும்.
டீலர், சர்வீஸ் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களுக்கும் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் வைத்திருப்பார். இவரிடம் வேலை செய்பவர்கள், வாகனத் தயாரிப்பாளரால் பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.
சர்வீஸ் செய்வதற்கான தொழில்நுட்ப உபகரணங்கள் வைத்திருப்பது மெக்கானிக்கின் வசதி வாய்ப்பைப் பொருத்தே இருக்கும். ஆனால், பல சமயம் பயிற்சி பெற்ற டெக்னீஷியனைவிட மெக்கானிக்குகள் திறமைசாலிகளாக இருப்பார்கள்.
ஒரு குறிப்பிட்ட வாகனத் தயாரிப்பாளரின் டீலர்கள் அனைவரும், நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான சர்வீஸ் கட்டணம் மட்டுமே வசூலிப்பார்கள். மேலும், வாகனத் தயாரிப்பாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள சர்வீஸ் இன்ஜினீயரின் சேவையும் நமக்குக் கிடைக்கும்.
வொர்க் ஷாப்பை பொருத்தவரை ஒரே மாதிரியாக கட்டணம் இருக்காது என்றாலும், சில சமயம் டீலரைவிட குறைவாகவும், சில சமயம் அதிகமாகவும் இருக்கும்.
வாகனத்தை நாம் ரீ-மாடல் செய்திருக்கும்பட்சத்தில் டீலரிடம் அதற்கான ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். மேலும், வாரன்டி கிளைம் செய்வதில் பிரச்னை ஏற்படும்.
அனைத்து உதவியும் கிடைக்கும். எந்த பிரச்னையானாலும் சரி செய்து தருவார்கள்.
ஏற்கெனவே செய்த சர்வீஸில் குறை இருந்தால், அதை நிவர்த்தி செய்து தர கோரும்போது, டீலரின் நடைமுறைச் சிக்கலினால் காலதாமதம் ஏற்படும்.
உடனடியாக நிவர்த்தி செய்து தருவார்கள். சில சமயம் காலதாமதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
டீலரின் பலமே ஒரிஜினல் உதிரி பாகங்களை எப்போதும் உபயோகிப்பதுதான். இங்கு ரீ-கண்டிஷன் செய்வதற்கு வேலையே இல்லை. எதை மாற்றுவது என்றாலும் புதியதுதான்.
இது வொர்க் ஷாப் உரிமையாளரைப் பொருத்து மாறுபடும். அதேசமயம் வாடிக்கையாளரின் பட்ஜெட்டும் கணக்கில் கொள்ளப்படும்.
விபத்துக்குள்ளான வாகனத்தை சர்வீஸ் செய்வது என்றால் டீலரிடம் தொகை அதிகமாகும். ஆனால், இன்ஷ¨ரன்ஸ் கிளைம் அவர்களே செய்துவிடுவார்கள்.
விபத்துக்கான சர்வீஸ் செலவு குறைவு என்றாலும், வாடிக்கையாளர் இன்ஷ¨ரன்ஸ் கிளைம் தொடர்பாக அலைவதில் கால விரயம் ஏற்படும்.
விடுமுறை நாட்களிலோ அல்லது அலுவலக நேரம் முடிந்த பின்போ உங்களுக்காகக் காத்திருக்க மாட்டார்கள்.
நமக்காகக் காத்திருப்பார்.
உங்களிடம் பல பிராண்டுகளில் வாகனங்கள் இருந்தால், அதை ஒரே டீலரிடம் சர்வீஸ் செய்ய முடியாது.
அனைத்து வாகனங்களையும் இவரே சர்வீஸ் செய்துவிடுவார்.
உங்களுக்கு அருகாமையில் டீலர் இல்லையென்றால், எங்கிருந்தாலும் டீலரைத் தேடிச் சென்றுதான் ஆக வேண்டும்.
தேவைப்பட்டால் வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்வார்.
டீலரின் சர்வீஸ் ஏரியாவுக்குள் நீங்கள் நுழைய முடியாததற்கு இன்ஷ¨ரன்ஸ், பாதுகாப்பு ஆகியவை காரணங்களாக இருந்தாலும், பெருந்தொகையாக பில் வரும்போது நிச்சயம் சந்தேகம் எழத்தான் செய்யும்.
சர்வீஸ் செய்யும்போது உடனிருந்தே கவனிக்க முடியும். சந்தேகம் எழ வாய்ப்பு இல்லை.
வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு தேவையான வசதி டீலரிடம் உண்டு.
வசதி குறைவுதான். சில சமயம் நிற்பதற்குகூட இடமிருக்காது.
டீலரிடம், போட்டி வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் பிராண்டுகளைப் பற்றிய உண்மையான விபரங்கள் கிடைக்காது.
அனைத்து வாகனங்களைப் பற்றியும் பொதுவான கருத்தை அறிய முடியும். தேவைப்பட்டால் பரிந்துரையும் கிடைக்கும்.
சில சமயம், பழைய மாடல் வாகனங்களுக்கு டீலரிடம் உதிரி பாகங்கள் கிடைக்காது. அதனால், சர்வீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆனால், சமீப கால வாகனத்துக்கு (வி.ஓ.ஆர்) 'வெஹிக்கல் ஆன் ரோடு' எனக் குறிப்பிட்டு வாகனத் தயாரிப்பாளரிடமிருந்து உடனடியாக உதிரி பாகங்களை வரவழைத்துத் தர முடியும்.
எங்கிருந்தாலும் வரவழைத்து அல்லது பழைய இரும்புக்கடையில் வாங்கியாவது பொருத்தி விடுவார்கள்.
இன்ஷ¨ரன்ஸ் புதிப்பிக்க வேண்டுமென்றால் டீலரிடமே அதைச் செய்ய முடியும்.
அதற்கான வசதிகள் இவரிடம் இல்லை.
வாகனத் தயாரிப்பாளர் பரிந்துரைத்த ஆயில் மட்டுமே பயன்படுத்துவார்கள்.
வாடிக்கையாளரின் விருப்பப்படி நடக்கும்.
வாகனத்தின் குறைபாடுகள் மற்றும் அது சம்பந்தமான புகார்கள் டெக்னீஷியன், சீஃப் டெக்னீஷியன், சூப்பர்வைஸர், சர்வீஸ் மேனேஜர் ஆகியோரின் மூலமாக பரிமாறப்பட்டு வாடிக்கையாளரை வந்தடையும். இதனால், சில சமயங்களில் குழப்பங்கள் நிலவுவது உண்டு.
எந்த குழப்பமும் இல்லாமல் நேரடியாகச் சொல்லிவிடுவார்கள்.
வாரன்டி சம்பந்தமான உதவிகள் பல சமயம் திருப்திகரமாகவும், சில சமயம் அதிருப்தியாகவும் முடிவது உண்டு.
வாயால் தரும் வாக்குறுதியே வாரன்டி.
குறிப்பிட்ட காலத்துக்குள் 99 சதவிகிதம் சர்வீஸ் செய்து தந்துவிடுவார்கள். முன் பணம் கேட்கப்படுவதில்லை. பிக் அப் மற்றும் டிராப் வசதியும் கட்டண சேவையுடன் சில இடங்களில் உண்டு.
வாகனத்தை குறிப்பிட்ட கெடுவுக்குள் சர்வீஸ் செய்வார்கள் என உறுதியாகச் சொல்ல முடியாது. சில சமயம் முன் பணம் கொடுக்க நேரிடும். தேவைப்பட்டால் கட்டணம் இல்லாமல் பிக் அப், டிராப் உண்டு.
கிரெடிட் கார்ட், செக், டி.டி ஆகிய வழிகளில் பணம் பெறும் முறை உண்டு.
பணம் மட்டுமே புழக்கத்தில் உண்டு.

No comments:

Post a Comment