Friday, 3 July 2015

நம்பர் பிளேட்டில் ஸ்டைல் காட்டலாமா?

எண்களால் இயங்குகிறது இன்றைய வாழ்க்கை!
கதவு எண், தேர்வு எண், தொலைபேசி எண், கிரெடிட் கார்டு எண், தியேட்டர் இருக்கை எண் என்று ஏதேதோ எண்களால்தான் அடையாளம் காணப்படுகிறோம். வீட்டுக்கு ஒரு வாகனம் வந்த பிறகு, ‘ரெஜிஸ்ட்ரேஷன் எண்’ணும் இந்த வரிசையில் சேர்ந்து விட்டது. ரெஜிஸ்ட்ரேஷன் எண் சொல்லும் தகவல்களைத் தெரிந்து கொள்வோமா...
தமிழ்நாட்டில் மொத்தம் 46 வட்டாரப் போக்குவரத்து ( R.T.O ) அலுவலகங்கள் உள்ளன. வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரெஜிஸ்ட்ரேஷன் செய்யாமல் பொதுச் சாலையில் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றம்.
 TN 09 AR 6004’ என்ற முறையில்தான் நம்பர் பிளேட்டுகள் எழுதப்பட்டிருக்கும். இதில் முதலில் உள்ள TN என்பது மாநிலத்தையும் ( TN - தமிழ்நாடு) அடுத்துள்ள 09 என்பது வாகனம் பதிவு செய்யப்பட்டுள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தையும் (09-கே.கே நகர்) AR என்பது அந்த ஆர்.டி.ஓ அலுவல கத்தின் பதிவு எண் வரிசையையும் குறிக் கின்றன.
பதிவு எண்கள் நான்கு இலக்கத்தில் மட்டுமே அமைந்திருக்கும். 9,999 வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகு, 10,000 மாவது வாகனத்துக்கு அடுத்த பதிவு எண் வரிசை தரப்படும்.A,B,C...Z, என்னும் வரிசை முடிந்த பிறகு AA, AB, AC... AZ BA,BB,BC... BZ என்று அடுத்துள்ள ஆங்கில எழுத்துக்களை இணைத்து பதிவு செய்யப்படும். இறுதி எழுத்தான ZZ வரைக்கும் வந்துவிட்டால் அந்த ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு புதிதாக வேறு ஒரு பதிவு எண் தரப்படும். உதாரணமாக சேலத்துக்கு தரப்பட்டிருந்த 27 என்ற பதிவு எண் முடிந்துவிட்டதால், தற்போது 30 என்ற புதிய எண் தரப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ அலுவலக எண்கள் வரிசையாகத் தரப்படாமல் இடைவெளிகளுடன் அமைந்திருப்பதற்கு இதுதான் காரணம்.
‘I’ மற்றும்‘ O ’ என்ற ஆங்கில எழுத்துக்களும் 1 - 0 என்ற எண்களும் ஒரே வடிவத்தில் இருப்பதால், படிக் கும்போது குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க, பதிவு எண் வரிசையில் Iமற்றும் என்ற ஆங்கில எழுத்துக்கள் சேர்க்கப்படவில்லை. அதே போல நி என்ற எழுத்து அரசாங்க வாகனங்களுக்கும் என்ற எழுத்து அரசுப் பேருந்துகளுக்கும் மட்டுமே தரப்படும். பொதுமக்களுக்கு தரப்பட மாட்டாது.
இந்த வரையறைகள் தமிழகத்துக்கு மட்டுமே பொருந்தும். பிற மாநிலங்களில் மற்ற எழுத்துக் களும்கூட தரப்படுகின்றன.
வாகனங்களின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் பிளேட்டுகள் கட்டாயம் ஆங்கில எழுத்துக்களில்தான்எழுதப்பட வேண்டும். விரும்பினால், அந்தந்த மாநில மொழி எழுத்துக்களையும் கூடுதலாக தனியாகச் சேர்த்துக்கொள்ளலாம். TN என்பதை த.நா என்றும் மற்ற ஆங்கில எழுத்துக்களை பட்டியலில் தரப்பட்டுள்ள எழுத்துக்களைக் கொண்டும் எழுதலாம். ஆனால், க, உ, ரு என்னும் தமிழ் எண் வடிவங்களை எழுத அனுமதி இல்லை. 1, 2, 3 என்ற வடிவங்களில்தான் எழுத வேண்டும்.
ராணுவ வாகனங்களுக்கு தனியான பதிவு எண் முறை இருக்கிறது. அவை ஆர்.டி.ஓ-வின் கட்டுப்பாட்டில் வராது.
நம்பர் பிளேட்டில் டாக்டர், வக்கீல் என்பதுபோன்ற குறியீடுகளைப் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு எழுதுவது சட்டப்படி தவறு!
வாடகை வண்டியின் பதிவு எண், எழுத்து கறுப்பு வண்ணத்திலும் பலகை மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். சொந்த உபயோகத்தில் உள்ள வாகனத்தின் பதிவு எண், எழுத்து கறுப்பு வண்ணத்திலும், பலகை வெள்ளையாகவும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment