நோயைத் தடுப்பதைவிட நோய் வராமல் தடுப்பது சுலபம். அதே போல்தான், கார் திருடு போன பிறகு அதை மீட்க எடுக்கும் சிரமத்தைவிட கார் திருடு போகாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுப்பது சுலபம். பொதுவாக என்ன மாதிரியான கார்களின் பக்கம் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதில்லை?
எலுமிச்சை மஞ்சள் கலர், ஆரஞ்சு கலர்... என்று கண்களைப் பறிக்கும் வண்ணம் தீட்டப்பட்ட கார்கள் மீது திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதில்லை.
அதேபோல கார்களைத் தனித்துவப்படுத்திக் காட்டும் பளபளா ஸ்டிக்கர்கள்
ஒட்டப்பட்ட கார்களின் பக்கமும் திருடர்கள் போவதில்லை. காரணம், இந்த மாதிரி கார்களை விற்பது சிரமம். அதே சமயம் இந்த காரைத் திருடிக் கொண்டு எங்கே போனாலும் சுலபமாக சிக்கிக் கொள்வார்கள்.
கியர் லாக், ஸ்டீயரிங் லாக் போலவே திருட்டுச் சாவி போட்டால் அலறி ஊரையே கூட்டும் கார் அலாரங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
கார் எந்த அளவுக்கு முக்கியமோ...அதே அளவுக்கு காருக்குள் நீங்கள் வைத்திருக்கும் பொருட்களும் பத்திரமாகக் காக்கப்பட வேண்டியவை! அதற்கு மிகச் சிறந்த வழி... மணிபர்ஸ், லேப்டாப் போன்றவற்றை காருக்குள் வைத்து விட்டுப் போகாமல் இருப்பதுதான்.
வேறு வழிஇல்லை என்றால் குறைந்தபட்சம் மணிபர்ஸ், அல்லது விலை உயர்ந்த பொருட்களை குளூவ் பாக்ஸில் வைத்து விட்டுச் செல்வது பெட்டர். காரணம் - வெளியில் இருக்கும் திருடனை இந்தப் பொருட்கள் குறைந்த பட்சம் சபலப்படுத்தாமலாவது இருக்கும்.
No comments:
Post a Comment