Saturday, 11 July 2015

பெட்ரோலை மிச்சப்படுத்த 360 டிகிரி டிப்ஸ்!

ட்டுகிற விதத்தில் ஓட்டி, பராமரிக்கும் விதத்தில் பராமரித்தால், எந்த வாகனமாக இருந்தாலும் பெட்ரோலுக்குச் செலவு செய்யும் பணத்தைக் கணிசமாக மிச்சம் பிடிக்க முடியும். டயர், இன்ஜின், டிரைவிங் ஸ்டைல் இந்த மூன்றிலும் இருக்கிறது சூட்சுமங்கள்.
இன்ஜின்
சர்வீஸ் மேனுவலில் உள்ளபடி குறித்த கால இடைவெளி-யில் முறையாக ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும்.
ஒரிஜினல் ஃபில்டர்கள் மற்றும் உதிரி பாகங்கள் மட்டுமே பொருத்தப்பட வேண்டும்.
கூலன்ட் அளவை அடிக்கடி பரிசோதித்து, முறையாகப் பராமரிப்பது அவசியம்.
கூலன்ட் பம்ப் பெல்ட், தளர்வாகவோ, அதிக இறுக்கமாகவோ இருக்கக் கூடாது.
கிளட்ச் ஸ்மூத்தாக இருக்க வேண்டும். உதறல் இருந்தால், இன்ஜின் சக்தி வீணாகும். அதனால், எரிபொருளும் வீண்தான்.
வால்வு டைமிங் சரியாக இருக்க வேண்டும், டைமிங் மிஸ்ஸா-னால், எரிபொருள் வீணாவதைத் தவிர்க்க முடியாது.
ஏர் கிளீனரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
ஐடிலிங் வேகம் சரியான அளவில் இருப்பது முக்கியம்.அதிகமாக இருந்தாலும் எரிபொருள் விரயமாகும்.
ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமென்றால், வாகனத்தை சரியான கால அளவுகளில் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச்சென்று, சர்வீஸ் செய்ய வேண்டும்!
டயரின் பங்கு
டயர்களின் காற்றழுத்தத்தைப் பரிசோதித்து, எப்போதும் சரியான அளவில் வைத்திருக்க வேண்டும். குறைந்த காற்றழுத்தம் இருந்தாலும், அதிக காற்றழுத்தம் இருந்தாலும் டயர்கள் பாதிக்கப்படும். இதனால், எரிபொருளும் வீணாகும். டயரைச் சரியாகப் பராமரித்தால், 3 முதல் 7 சதவிகித எரிபொருளைச் சேமிக்கலாம்.
லோ ப்ரொஃபைல் டயர்கள் பயன்படுத்துவதால், க்ரிப், ட்ராக்ஷன் கன்ட்ரோல் சிறப்பாக இருக்கும். காரை வளைத்துத் திருப்புவதற்கும் நன்றாக இருக்கும். ஆனால், மைலேஜ் குறைந்து விடும்.
டிரைவிங் ஸ்டைல்.
வேகத்துக்கு ஏற்ப கியரைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். தவறான கியர் உபயோகித்தால், எரிபொருள் வீணாகும்.
தேவையற்ற திடீர் பிரேக்கைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டுச் செல்ல வேண்டும். ஏனென்றால், திடீர் பிரேக் எரிபொருள் செலவை 15 சதவிகிதம் அதிகரிக்கச் செய்கிறது. எங்கே மெதுவாகச் செல்ல வேண்டும், எங்கு நிறுத்த வேண்டும், எங்கு திரும்ப வேண்டும் என்பதை முன்பே கணித்துவிட்டால், பிரேக் பயன்படுத்து-வதைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.
கிளட்ச் மீது கால் வைத்தபடியே ஓட்டக் கூடாது.
ஏ.ஸி பயன்பாடும் எரிபொருள் சிக்கனத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஏ.ஸி-யை ரீ-சைக்கிள் மோடில் வைத்துவிட்டு, ஃப்ளோயரின் வேகத்தை அதிகமாக்குங்கள். காரில் ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்டதும், ஃப்ளோயரின் வேகத்தைக் குறைத்துவிடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், எரிபொருளைச் சிக்கனப்படுத்தலாம்.
சிக்னலிலோ அல்லது வேறு இடங்களிலோ ஒரு நிமிடத்துக்கு மேல் நிற்கும்படி நேர்ந்தால், இன்ஜினை ஆஃப் செய்துவிடுங்கள்.
நீங்கள் அதிகம் பயன்படுத்தும் சாலையில் செல்லும்போது, வாகனத்தைச் சுலபமாகவும் நேர்த்தியாகவும் ஓட்ட முடியும். டிராஃபிக் இல்லாத சாலையில், அது சற்று தூரம் அதிகமானதாகவும் இருக்கலாம். டிராஃபிக்கில் நிறுத்தி நிறுத்தி ஓட்டுவதைவிட, குறைவாகத்தான் இதற்கு எரிபொருள் செலவாகும்.
தேவையற்ற சமயங்களில், காரின் மேல் இருக்கும் ரூஃப் கேரியரைக் கழற்றி வைத்துவிடுவது நல்லது. அதேபோல், தேவையற்ற பொருட்களை காரில் வைத்துக்கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும்!

No comments:

Post a Comment