நம்மைப் பெற்று வளர்த்து, ஆளாக்கியதில் நம் பெற்றோர்களுக்கு இருக்கும் பங்கு வேறு யாருக்குமே இருக்க முடியாது. நோய்நொடி அண்டாமல் வளர்த்து, பள்ளி, கல்லூரிக்கு அனுப்பி படிக்க வைத்து, திருமணம் செய்து, நிம்மதியான ஒரு வாழ்க்கையை நாம் அடைய அவர்கள் எத்தனையோ தியாகங்களைச் செய்திருப்பார்கள். இரவு பகல் பார்க்காமல் தங்களது பிள்ளைகளுக்காக உழைத்து ஓடாய் தேய்ந்த அவர்கள் தங்களது ஓய்வு காலத்தில் நிம்மதியாகவும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாகவும் இருப்பதற்குத் தேவையானதைச் செய்வது பிள்ளைகளின் கடமை. இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி பிரகலா வெல்த் மேனேஜ்மென்ட் இயக்குநரும், குடும்ப நிதி ஆலோசகருமான சொக்கலிங்கம் பழனியப்பனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.
''முன்னெல்லாம் வயசான காலத்து லயும் பெற்றோர்களை பிள்ளைகள் பேணிக் காத்து வந்தாங்க. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கல்யாணத்துக்குப் பிறகு அவர்களைக் கவனிச்சுக்கறது நம் கலாசாரத்தில் ஊறிப் போன விஷயமா இருந்தது. ஆனா, கால மாற்றத்துல பெத்தவங்களைக் கவனிக்காம விடுறதுங்கறது இப்ப சகஜ மாயிடுச்சு. தன் குடும்பம், தன் மனைவி, தன் குழந்தைகள்னு திட்டமிட்டு வாழ்க்கையை நடத்துற மாதிரி, தனது பெற்றோர்களைக் கவனிப்பதிலும் திட்டமிட்டு நடந்துகொள்ளணும். நமக்கு எந்த குறையும் வைக்காமல் வளர்த்தவர்களை நாமும் குறையில்லாமல் வெச்சுக் கணும்'' என்றவர், பெற்றோர் களுக்கான சேமிப்பு குறித்து சொன்னார்.
''பெற்றோர்களுக்காக சேமிக்க நினைக்கும் பிள்ளை களுக்கான முதல் சாய்ஸ், மூத்த குடிமக்களுக்கான வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்தான். பிள்ளைகள் தங்கள் வருமானத்துல கொஞ்ச பணத்த எடுத்து பெற்றோர்கள் பேர்ல வங்கியில் சேமிச்சுட்டு வரலாம். அவர்களுடைய ஓய்வுகாலம் நெருங்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகை ரெடியா இருக்கும். அது மூலமா அவர்களுடைய செலவுகளுக்கு மாசா மாசம் வட்டிப் பணம் கிடைக்குற மாதிரி பண்ணலாம். வசதி இருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்ல போட்டுட்டு, அதிலிருந்து கிடைக்கும் வட்டிப் பணத்தை பெற்றோர்களுக்கு தரலாம். அவர்கள் பயன்படுத்திய பிறகு, தாங்கள் பயன்படுத்துற மாதிரி நாமினியாக தங்களை இணைச்சுக்கலாம்'' என்றவர், பெற்றோர்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கு என்ன செய்யலாம் என்பதையும் சொன்னார்.
''வேலை செய்யும் நிறுவனத்தில் மனைவி, குழந்தைகளுக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது பெற்றோர்களுக்கும் சேர்த்து எடுத்துக் கொள்வது நல்லது. பெற்றோர் வேலைக்குப் போகிற வர்களா இருந்து அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் பாலிசி எடுத்திருந்தாலும், பிள்ளைகள் அவர்களுக்காக தனியா ரெண்டு லட்சத்துக்கு மெடிக்ளைம் பாலிசி எடுத்து வச்சுக்கிட்டா அதிக செலவு வந்தால் எளிதாகச் சமாளிக்க முடியும்'' என்றார்.
''வயசான காலத்துல ஆன்மிக சுற்றுலாக்கள் போகணும்ன்னு பெற்றோர்கள் ஆசைப்படுவாங்க. ஆன்மிக சுற்றுலாவுக்காகவே சேமிப்புத் திட்டங்கள் இருக்கு.
மாசாமாசம் கொஞ்சப் பணத்தைக் கட்டிட்டு வந்தா ஆறு மாசத்துக்கு ஒரு தடவையோ வருஷத்துக்கு ஒரு தடவையோ ஆன்மிக சுற்றுலாப் போறதுக்கு அந்தப் பணம் அவங்களுக்குப் பயன்படும்.
திருமணத்துக்குப் பிறகு கணவன் தன்னுடைய பெற்றோர்களைக் கவனிச்சுக்கற மாதிரி, மனைவியும் தன்னுடைய பெற்றோர்களுக்கும் பொருளாதார ரீதியாக உதவணும். இதற்கு கணவனும், மனைவியும் ஒருமனதா கலந்தாலோசிச்சு முடிவு எடுக்கறது நல்லது. பிள்ளைகள் கஷ்டப்பட்டு முதலீடு செஞ்சு சேமிச்சு குடுக்குற பணத்தை பெற்றோர்களும் தப்பான விஷயங்களுக்குப் பயன் படுத்திக்காம இருக்கறது ரொம்பவே முக்கியமான விஷயம்'' என்றார் சொக்கலிங்கம் பழனியப்பன்.
''எனது நண்பன் மோகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கே செல்ல வேண்டிய நிலை. பெற்றோர்களையும் உடன் அழைத்துச் செல்ல முடியாத சூழல். அதனால் அவர்கள் அதுவரை வசித்துவந்த 4 பெட் ரூம் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, அதே அபார்ட்மென்டில் இருந்த சிறிய பிளாட் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்கே பெற்றோரை தங்க வைத்துவிட்டார். பெரிய வீட்டிலிருந்து வரும் வாடகைப் பணம் பெற்றோர்களுக்கு வாடகை மற்றும் செலவு களுக்கு போதுமானதாக இருந்தது. அதுமட்டுமின்றி பெரிய வீட்டை வாடகைக்கு விட்டபோது கிடைத்த டெபாசிட் பணத்தை அவர்களது அவசரத் தேவைக்காக அப்படியே வங்கியில் போட்டு வைத்து விட்டார். அதுமட்டுமின்றி ரெண்டு பேருக்கும் மெடிக்கல் இன்ஷூரன்ஸ் எடுத்து கேஷ்லெஸ் கார்டும் வாங்கிக் கொடுத்துவிட்டார்.
இவரவிட இன்னும் கொஞ்சம் அட்வான்ஸ்டா யோசிச்சு முதலீடு செய்திருக் கிறார் வினித். இவருக்கு குடும்ப பிரச்னையால அப்பா அம்மாவைவிட்டு தனியா வாழ வேண்டிய நிர்ப்பந்தம். பெரிசா கைலேர்ந்து பணம் எடுத்துக் குடுக்கலைன்னாலும், அப்பா ஓய்வுபெறும்போது கைக்கு கிடைச்ச கணிசமான தொகை, அவரு பேருல இருந்த நிலம், வேறு சில முதலீடுகள் எல்லாத்தையும் வெச்சு ஃபைனான்ஷியல் பிளானர் மூலமா பக்காவாக ஒரு பிளான் போட்டு கொடுத்துவிட்டார் வினித்'' என்றார் புவனா.
உங்கள் பெற்றோர்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு நீங்கள் இதுவரை யோசிக்காமல் இருந்திருக்கலாம். இனியாவது முயற்சித்தால், அவர்களை தவிக்க விடாமல் காக்கலாமே!
No comments:
Post a Comment