Tuesday 16 June 2015

தன்னம்பிக்கை வாசகங்கள்

தன்னம்பிக்கை வாசகங்கள்

1.      நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாவே ஆகிவிடுவாய்.
2.      உனக்குத் தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
3.      நீ தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சி செய்து கடினமாக உழைத்தால், வெற்றி பெறுவாய்.
4.      என்னை சந்திப்பவர்கள் வெற்றியடையாமல் போவதில்லை,
இப்படிக்கு - தோல்வி.
5.      தோல்வியே வெற்றிக்கு முதல்படி.
6.      தோல்விகளிடம் வழிகேட்டுத்தான் வந்துசேர முடியும் வெற்றியின் வாசல்படிக்கு.
7.      நான் தோல்வியைக் காதலித்தேன், வெற்றியை கரம் பிடித்தேன்.
8.      தோல்வி என்பது வாழ்க்கை கற்றுதரும் பாடங்களில் ஒன்றே தவிர, அதில் அவமானம் இல்லை.
9.      தோல்வியிலிருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி.
10.  தோல்வி உன்னை துரத்துகிறது என்றால், நீ வெற்றியை நெருங்குகிறாய் என்று அர்த்தம்.
11.  வெற்றிக்கான முன்படியில் கால் வைக்கத் தடுமாறும்போது, கைபிடித்து வழிநடத்துகின்றது ஒவ்வொரு முதற்தோல்வியும்.
12.  நீ தோற்பதுமில்லை, தோற்கடிக்கப்படுவதுமில்லை. நீ வெல்வதற்கான கோடியில் ஒரு முயற்சி பிழையானது, அவ்வளவே.
13.  உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.
14.  மூச்சுவிட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை. அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்துகொண்டிருப்பவனே மனிதன்.
15.  நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர வேறு யாராலும் தடுக்க முடியாது.
16.  நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே, தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்விவந்து அணைத்தாலும் அந்தத் தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.
17.  நீ வெற்றிக்கு போராடும்போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள், நீ வெற்றிபெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்.
18.  வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய், செய்வதை விரும்பிச் செய், செய்வதை நம்பிக்கையோடு செய்.
19.  சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
20.  பலரும் தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.
21.  பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.
22.  முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும். ஆனால் முயலாமை வெல்லாது.
23.  மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப்பிடிக்கிறது சோம்பல்.
24.  நம்பிக்கையுடன் நகர்ந்துகொண்டே இரு நதி போல, ஒரு இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக.
25.  நீ சுமக்கின்ற நம்பிக்கை, நீ கீழே விழும்போது உன்னை சுமக்கும்.
26.  ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை, நம்பிக்கை இருக்கும் வரை  நாம் தோற்பதில்லை.
27.  மண்ணின் புன்னகை மலர்கள், மனதின் புன்னகை நம்பிக்கை.
28.  கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை, முயற்சிகளே
29.  முயற்சி திருவினையாக்கும்.
30.  விடாமுயற்சி மட்டுமே நம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும்.
31.  நம் கனவுகள் நிஜமாவதும், நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது.
32.  முயற்சிகள் தவறலாம், முயற்சிக்க தவறலாமா?
33.  உழைத்துச் சிந்திடும் வியர்வை, நிச்சயம் தந்திடும் உயர்வை.
34.  உங்கள் உழைப்பை உறுதியுடன் செய்யுங்கள், வெற்றி அருகில்தான் உள்ளது.
35.  மண்ணில் விழுவது தப்பில்லை, ஆனால் விதையாக விழுந்து மரமாக எழு.
36.  உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஓர் நாள் விதைகளாக மண்ணில் விழுந்தவையே.
37.  வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றிதான் ஆக வேண்டும்.
38.  தன்னை உடைத்துக் கொள்ளும் விதைகளே, விண்ணைத் தொடுகிற விருட்சங்களாகும்.
39.  முயற்சி ஓர் பூ, நம்பிக்கை ஓர் விதை, தன்னம்பிக்கை ஓர் தளிர், துணிவு ஓர் செடி, சாதனை ஓர் மரம்.
40.  மழை கண்டு மருளாத மலர்போல, துயர்கண்டும் துவளாத மனம் வேண்டும்.
41.  தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில் முடியாது என்று எதுவுமே இல்லை.
42.  விழுவெதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல.
43.  முடியாதது எதுவுமில்லை.
44.  முடியாது என்பதை பிறகு சிந்தியுங்கள். எப்படி முடிப்பது என்பதை எப்பொழுதும் சிந்தியுங்கள், வெற்றி நிச்சயம்.
45.  விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுந்திரு. அனைத்தையும் சாதிக்கலாம்.
46.  வலியோடு போராடினால் தான் ஒரு பெண் தாயாக முடியும், இருளோடு போராடினால் தான் புழு வண்ணத்துப்பூச்சியாக முடியும், மண்ணோடு போராடினால் தான் விதை மரமாக முடியும், வாழ்க்கையோடு போராடினால் தான் நீ வரலாறு படைக்க முடியும்.
47.  வலிகள் இல்லாமல் வழிகள் இல்லை, விழிகள் மூடினால் வெற்றிகள் இல்லை, முயற்சி இல்லாமல் மகிழ்ச்சி இல்லை, முயன்ற மனிதன் தோற்றது இல்லை, கோபம் கொண்டால் உறவு இல்லை.
48.  வெற்றி வந்தால் பணிவு அவசியம், தோல்வி வந்தால் பொறுமை அவசியம், எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம், எது வந்தாலும் நம்பிக்கை அவசியம்.
49.  ஓடும்போது விழுந்துவிடுவோம் என்று நினைப்பவனைவிட, விழுந்தாலும் எழுந்து ஓடுவோம் என்று நினைப்பவன்தான் ஜெயிப்பான்.
50.  ஜெயித்துக்கொண்டே இரு. நீ வளரும்வரை அல்ல, உன்னை வெறுத்தவர்கள் பார்த்து வியந்து வாழ்த்தும் வரை.
51.  வெற்றி மீது வெற்றி வந்தால் சரித்திரத்தில் பெயர் வரும், தோல்வி மீது வெற்றி வந்தால் சரித்திரமே உன் பெயராக வரும்.
52.  எழுந்து நடந்தால் இமயமலையும் நமக்கு வழி கொடுக்கும், உறங்கிக் கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறை பிடிக்கும்.
53.  நீ வெளிச்சத்தில் நடந்தால் உலகமே உன்னை பின்தொடரும். ஆனால், நீ இருட்டில் நடந்தால் உன் நிழல்கூட உன்னை பின்தொடராது.
54.  நம்முடைய வெற்றிக்கு இருக்கும் பெரிய தடையே, தோற்றுவிடுவோம் என்ற பயம்தான். பயந்தவன் ஜெயித்ததில்லை, பயம் அறியாதவன் தோற்றதில்லை.
55.  போராடி தோற்றுப்பார், ஜெயித்தவனும் உன்னை மறக்கமாட்டான்.
56.  வாழ்க்கையில் ஜெயிக்க நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் ஜெயிக்க எதிரிகள் தேவை.
57.  சரியான பாதையை தேர்ந்தெடுத்தால்தான் வாழ்க்கையில் வெற்றியடைப முடியும்.
58.  நிராசையாகிப் போனாலும் பரவாயில்லை, எப்போதும் உயர்ந்த இலக்குகளைக் குறி வையுங்கள்.
59.  லட்சியத்தை காதலிப்பவனுக்கு லவ் பெயிலியர் இல்லை. தன்னம்பிக்கையை காதலிப்பவனுக்கு தற்கொலைகள் இல்லை.
60.  தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும்தான் வெற்றி பெறுவதற்கான் முக்கிய அம்சங்கள். அவை எல்லாவற்றையும்விட முக்கியம் அன்பு. - சுவாமி விவேகானந்தர்.
61.  உயிரே போகும் நிலை வந்தாலும், தைரியத்தை கைவிடாதே. நீ சாதிக்க பிறந்தவன். துணிந்து நில், எதையும் வெல். - சுவாமி விவேகானந்தர்.
62.  கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்துபார், நீ அதை வென்றுவிடலாம். - அப்துல் கலாம்.
63.  வாய்ப்புக்காக காத்திருக்காதே, உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள். - அப்துல் கலாம்.
64.  கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பதல்ல, உன்னைத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு. - அப்துல் கலாம்.
65.  மாபெரும் லட்சியத்தையும், வெற்றியில் நம்பிக்கையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும். – அம்பேத்கர்.
66.  தவறே செய்ததில்லை என்பவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர். - தாமஸ் ஆல்வா எடிசன்.
67.  எடுத்த செயலை முடிக்காமல் கைவிடும்போது வெற்றிக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்று பலருக்கு தெரிவதில்லை. எனவே தோல்வியை தழுவுகின்றனர். - தாமஸ் ஆல்வா எடிசன்.
68.  என்ன நடந்தாலும், எதை இழந்தாலும் சோர்ந்துபோக மாட்டேன். காரணம் நான் “100” வெற்றிகளை பார்த்தவன் அல்ல, நான் “1000” தோல்விகளை பார்த்தவன். - தாமஸ் ஆல்வா எடிசன்.
69.  வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பு, குறையாத முயற்சி, வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை இம்மூன்றும் இருந்தால் போதும். - தாமஸ் ஆல்வா எடிசன்.
70.  தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அதைத் திருத்திக்கொள்ளும் பலமும்தான் உண்மையான வெற்றிக்கு வழி. – லெனின்.
71.  வெற்றி பெறுவது எப்படி? என்று யோசிப்பதைவிட, தோல்வி அடைந்தது எப்படி? என்று யோசித்துப்பார், நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய். – ஹிட்லர்.




No comments:

Post a Comment