Wednesday 12 August 2020

‘மாமன்னன்’ முதலாம் ராஜ ராஜ சோழனை பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும்

‘மாமன்னன்’ முதலாம் ராஜ ராஜ சோழனை பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும்

‘மாமன்னன்’ முதலாம் ராஜ ராஜ சோழனை பற்றிய (வரலாற்று) தகவல், செய்திகளை படித்து, பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ளும்போது, பொதுவாக நம் மனதில் கீழ்கண்ட சிந்தனைகள், எண்ணங்கள், கேள்விகள், சந்தேகங்கள் எழுகின்றன. அவைகளை நாம் நினைத்து, சிந்தித்து, ஆராய்ந்து, அறிந்து, தெரிந்து பதிவு செய்ய முயற்சி செய்யலாம், செய்வோம். 

மூலக்கேள்வி - இப்பொழுது உள்ள பொருட்கள், அறிவியல் - தொழில்நுட்ப வசதிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், குறிப்பாக ராஜ ராஜ சோழனின் (கி. பி. 947 - கி. பி. 1014) 67 ஆண்டுகளில் இருந்தனவா? அப்படி இல்லையென்றால், இவைகளுக்கு மாற்றாக அந்த காலத்து மக்கள் என்ன, எதை பயன்படுத்தினார்கள்?

1.முதலாம் ராஜ ராஜ சோழன் எங்கு சென்றார்? என்ன ஆனார்? அவரைப் பற்றிய கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகள் அதிகமாக ஏன் இன்று இல்லை? ஒருவேளை அவர் இறந்திருந்தால், எங்கு எப்போது இறந்தார்? அவரது மரணம் இயற்கையா அல்லது கொலை செய்யப்பட்டாரா? அவரது உடல் எங்கு, எப்போது யாரால் அடக்கம் செய்யப்பட்டது?

2.முதலாம் ராஜ ராஜ சோழனின் அரசாட்சியில் இருந்த நிலங்கள் என்ன ஆனது? இப்போது யாரிடம் உள்ளது?

3.ராஜ ராஜ சோழன் வாழ்ந்த அரச அரண்மனை இப்போது எங்கே இருக்கிறது? ராஜ ராஜ சோழன், அரண்மனை பொருட்கள் மற்றும் அவர் பயன்படுத்திய போர் வாள் இப்போது எங்கே உள்ளன, என்ன ஆயின?

4.ராஜ ராஜ சோழன் வாழ்ந்த காலத்தில் செய்யப்பட அவரின் கல் சிற்பங்கள், சிலைகள், வரையப்பட்ட ஓவியங்கள், அவர் எழுதிய ஓலை சுவடிகள் எங்கே? என்ன ஆனது?

5.அன்று தண்ணீரை எப்படி பிடித்துஎதில் சேமித்து வைத்தார்கள்?

6.அன்று வீட்டில் சமைப்பதற்கும்மற்ற பயன்பாட்டிற்கும் நெருப்பை எப்படி உருவாக்கினார்கள்?

7.அங்குஅன்றைய மக்களின் பெரும்பாலான தினசரி உணவுகள் என்னஅன்று உணவக முறை இருந்ததா?

8.தஞ்சாவூரில் ராஜ ராஜ சோழன் வாழ்ந்த ஆயிரம் (1000) வருடங்களுக்கு முன்னால், அப்பொழுது அரச குடும்ப நபர்களுக்கும், சாதாரண பொது மக்களுக்கும் தனியாக கழிவறை வசதி இருந்ததா?

9.அன்றைய மக்கள் எதை வைத்து பல் துலக்கினார்கள்?

10.அன்றைய அரச குடும்ப நபர்கள் மற்றும் பொது மக்கள் எங்கு குளித்தார்கள் அல்லது குளித்திருப்பார்கள்யூகம் ஏதாவது இருப்பின்சொல்லவும்.

11.அங்கு அன்றைய அரச குடும்ப நபர்கள் மற்றும் பொது மக்களின் ஆடை முறைகள் என்ன? அவர்கள் உள்ளாடை அணிந்தார்களா? குறிப்பாக அரசிகள் உள்ளாடை அணிந்தார்களா?

12.அன்று ஆண்களும்பெண்களும் எதை வைத்து முடி வெட்டுதல்முக சவரம் செய்தார்கள்அன்று கத்தரிக்கோல் இருந்ததா?

13.அன்றைய மக்கள் காலணி அணிந்தார்களாஅப்படியென்றால் என்ன பொருளில் அணிந்தார்கள்?

14.அன்று முகம் பார்க்கும் கண்ணாடி இருந்ததா?

15.இன்றுள்ள 'வெளிச்சத்திற்கு மின்விளக்கு, காற்றுக்கு மின் விசிறி'  வசதிகள் அன்று இல்லை. எனில், அன்று இவைகளுக்கு பதில் எதை பயன்படுத்தினார்கள்?

16.அன்று பொது மக்கள் ஒவ்வோர் இல்லங்களிலும் நாட்காட்டி இருந்ததா? அன்று மக்கள் எப்படி தேதியினை தெரிந்து கொண்டார்கள்?

17.அன்று மணி, நேரம் பார்த்து, தெரிந்து கொள்ள கடிகாரம் இல்லை. எனவே அன்று நேரத்தை எப்படி தெரிந்துகொண்டார்கள்?

18.அன்று அவர்களிடம் தகவல் தொடர்பு எப்படி இருந்தது? எப்படி தகவலை பகிர்ந்து கொண்டார்கள்? அவர்களின் தகவல் தொடர்பு சாதனங்கள் என்ன?

19.அன்று அரச குடும்ப நபர்களும், பொது மக்களும் என்ன தமிழில் பேசினார்கள்? செம்மொழியிலா அல்லது இன்று நாம் பேசும் சாதாரண பேச்சுத் தமிழிலா?

20.அங்கு, அன்று, அப்பொழுது காகிதப் பயன்பாடு இருந்ததா? என்ன பொருளில் எதை வைத்து எழுதினார்கள்? ஆவணங்களை எந்த பொருளில் எழுதினார்கள்? ஓவியங்களை என்ன மேற்பரப்பு பொருளில் வரைந்தார்கள்?

21.அன்று மக்கள் படிப்பறிவையும், பொது அறிவையும் எப்படி வளர்த்துக் கொண்டார்கள்? நாட்டு நடப்பு விஷயங்களை எப்படி தெரிந்துகொண்டார்கள்?

22.அன்று பண பரிமாற்றங்கள் எப்படி இருந்தது? பண முறைகள் எப்படி இருந்தது?

23.அங்கு, அன்றைய ஆண்களும், பெண்களும் தங்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு / அரைஞாண் கொடி கட்டியிருந்தார்களா?

24.அங்கு, அன்றைய மக்களின் திருமணத்தில் தாலி இருந்ததா?

25.அங்கு, அன்று தேவதாசி / விபச்சார முறை இருந்ததா?

26.அங்கு, அன்றைய மக்களிடம் சாதிய பாகுபாடும், தீண்டாமையும் இருந்தனவா?

No comments:

Post a Comment