Thursday 2 August 2018

நீங்களும் ஆகலாம் மீம் க்ரியேட்டர்...!


நீங்களும் ஆகலாம் மீம் க்ரியேட்டர்...!

    இப்போ இருக்கிற ஜென் இசட்கிட்ட ட்ரெண்டிங்ல இருக்கிற முக்கியமான ஒரு விஷயம்தான் மீம் கிரியேட் பண்றது. தமிழ்நாட்டுல யாரைக் கேட்டாலும் இன்ஜினீயரிங் படிக்கிறோம்னு சொன்ன காலம் போய் இப்போ யாரைக் கேட்டாலும் மீம் க்ரியேட்டர்னுதான் சொல்றாங்க. அந்த அளவுக்கு டாக்டருக்குப் படிச்சவங்க, ஆர்ட்ஸ் படிச்சவங்க, இன்ஜினீயரிங் படிச்சவங்க, வக்கீலுக்குப் படிச்சவங்க எல்லோரும் மீம் க்ரியேட்டராதான் சுத்திகிட்டு இருக்காங்க.

   எந்த ஒரு விஷயத்தையும் ஒரே போட்டோவில் அழகாகப் புரிய வெச்சு சிரிக்க வைக்கிறதுக்குப் பேர்தான் 'மீம்'. மொதல்லே இந்த மீம்னா என்ன?

 ஒரு போட்டோ, இல்லேன்னா ஒரு வீடியோ எடுத்து அதுல மேலோட்டமாகக் கொஞ்சம் வார்த்தைளைத் தூவினால் சுடச் சுட மீம் ரெடி. அந்த வார்த்தைகளும், போட்டோவும் கொஞ்சம் சிரிக்கிற மாதிரியும் சிந்திக்கிற மாதிரியும் இருக்கிறதுக்குப் பேர்தான் பெர்ஃபெக்ட் மீம். இது வந்த புதுசுல இந்த ஐடியாவுலதான் வந்துச்சு. நினைச்சுக்கூடப் பார்க்க முடியாத அளவுக்கு இப்போல்லாம் மீம் வர ஆரம்பிச்சுடுச்சு. அது ரசிக்கிற மாதிரியும் இருக்கு.

மீம் க்ரியேட்டர் ஆகணும்னா என்ன செய்யணும் தெரியுமா?

* மீம் க்ரியேட்டர் ஆக முதல் மற்றும் முக்கியமான வழிதான் படம் பார்க்கிறது. நீங்க என்னதான் பிசியா இருந்தாலும் எப்போ புது படம் ரிலீஸ் ஆனாலும் கண்டிப்பா பார்த்துடணும். அப்போதான் பாஸூ புதுப்புது ட்ரெண்டான மீம் எல்லாம் க்ரியேட் பண்ண முடியும்.

* எப்பவும் ஆதித்யாவோ, யூ டியூப்ல ஏதாவது காமெடி வீடியோவை பார்த்துக்கிட்டே இருக்கணும். மீம் க்ரியேட் பண்ற முக்கால்வாசிப் பேருக்கு வடிவேல்தான் குலசாமி. அதனால் வைகைப் புயல் வடிவேல் காமெடியை மறக்காமப் பார்க்கணும்.

* உங்களுக்கு ஆங்கிலம் வருதோ இல்லையோ ``ஆல்ரெடி கேம் ப்ரோ``, ``வேற லெவல் ப்ரோ`` அப்படிங்கிற மாதிரி டயலாக்ஸ் எல்லாம் சரியான டைம்ல எழுதத் தெரிஞ்சிருக்கணும்.

* உங்க பேர் உங்களுக்குத் தெரியுமா, பக்கத்து .டி.எம்- பணம் வருதான்னு தெரியுமா?, காலைல என்ன சாப்பிட்டீங்கனாவது தெரியுமா? இப்படி எதுவுமே தெரியலைனாலும் பரவாயில்லை. ஒரு மீம் க்ரியேட் ஆகணும்னா உங்களுக்கு போட்டோஷாப் கொஞ்சமாவது தெரியணும். மீம் க்ரியேட்டர் ஆகணும்னா ஃபர்ஸ்ட் அதைக் கத்துக்குங்க ப்ரோ.

* உங்களுக்கு மீம் பண்ண ஐடியாவே கிடைக்கலையா... போய் யூ டியூப் பாருங்க. பட் எந்தக் காலத்துலேயும் காப்பி மட்டும் பண்ணிடாதீங்க. ஏன்னா நீங்க காப்பி அடிக்கிற மீமை ஏற்கெனவே காப்பியடிச்சுப் பண்ணி இருக்கலாம். அதெல்லாம் பாவம் மை சன்.

* திடீர்னு சிலநாள் மீம் பண்றதுக்கு டாப்பிக்கே இல்லாமப் போயிடும். அந்த மாதிரி நாள்லதான் நீங்க உங்க மூளையை யூஸ் பண்ணணும். ஏதாவது இன்ஜினீயர்ஸ் லைஃப், சிங்கிள் ஃபீலிங், ``ஊட்டி கேர்ள் கோயம்புத்துர் கய் மேக்ஸ் குட் பேர்`` அப்படின்னு வித்தியாசமா பார்க்கிறவங்க பதறுற மாதிரி ஏதாவது மீம் பண்ணிப் பேர் வாங்கணும்.

* டீஸர் வந்தாலும் சரி, ட்ரெய்லர் வந்தாலும் சரி, உங்க பர்ஸ் 2000 ரூபாய் பணத்தோட காணாமப் போனாலும் சரி எல்லாத்தையும் காமெடியா எடுத்துகிட்டு மீம் போடத் தெரிஞ்சிருக்கணும். நோ சீரியஸ் ஃபீலிங்.

* முக்கியமா மீம் க்ரியேட்டர்ஸூக்குக் கோபம் கூடவே கூடாது. யாராவது உங்க மீம் மொக்கையா இருக்குனு சொன்னா வருத்தப்படாம, ஃபேக் ஐடி ஹாய் சொல்வதைக் கேட்கிற மாதிரி கேட்டுட்டுப் போய்கிட்டே இருக்கணும். உங்களை ரொம்ப கலாய்க்கிறவங்களுக்கும் ஒரு மீமைப் போட்டுடுங்க.

* எல்லாத்தையும் விட மீம் க்ரியேட்டர் ஆக முக்கியமான ஒரு விஷயம். அதான் ப்ரோ காமெடி சென்ஸ். அதெல்லாம் கத்துக்க முடியாது. தானா வரணும்.

ஆல் தி பெஸ்ட் பாய்ஸ்!


MEME INFORMATION-1

MEME INFORMATION-2

MEME INFORMATION-3

MEME INFORMATION-4

MEME INFORMATION-5

MEME INFORMATION-6

MEME INFORMATION-7

MEME INFORMATION-8

MEME INFORMATION-9

MEME INFORMATION-10

TOP BEST FREE TAMIL MEME CREATING APPS

Sl. No
App Name
Developer
Installs
Rating & Reviewers
Released Date
App Logo
1
Meme Creator & Templates | Tamil - 1.4.7
Young PileStock

5,00,000+
4.5 & 4,823
08.08.2017.
‘Chandramukhi’ Vadivelu Fearing Face
2
Meme Creator - Memes Generator Tamil Free Template - 1.7
Nithra Apps
1,00,000+
4.5 & 3,340
20.12.2016.
Yellow Box with Black Pencil
3
Tamil Memes Creator - 2.0
Memees
1,00,000+
4.4 & 1,474
16.12.2016.
‘Marudhamalai’ Police Vadivelu’s  Photo
4
Tamil Memes - 3.3
Tamil Memes
1,00,000+
4.2 & 1,031
28.08.2015.
Video Camera with Smiley Symbols
5
Tamil Trending Memes - 3.3
Tamil Trending Memes
1,00,000+
4.3 & 9,28
11.05.2017.
5 Tamil Comedy Actors’ Photo


TOP BEST FREE MEME CREATING APPS - GENERAL

Sl. No
App Name
Developer
Installs
Rating & Reviewers
Released Date
App Logo
1
Meme Generator Free - 4.425
ZomboDroid

1,00,00,000+
4.5 & 3,02,910
06.09.2011.
‘Meme Generator Free’ words
2
GATM Meme Generator - 1.887d
IDDQD
10,00,000+
4.5 & 78,877
02.04.2012.
Pink insect with yellow colour
3

Meme Creator - 7.2.3
Gentoozero
10,00,000+
4.4 & 38,754
25.01.2014.
‘M’ letter with blue background.
4
Meme Generator (old design) - 3.273
ZomboDroid

10,00,000+
4.2 & 17,546
11.03.2016.
‘Meme Generator (old design)’ words with colours at bottom.
5
Meme Generator - Create funny memes - 5.25.18
Generic Apps
10,00,000+
4.3 & 9,931
02.07.2017.
Cartoon doll with blue background.
6
Video & GIF Memes Free - 1.048
ZomboDroid

10,00,000+
4 & 11,376
16.07.2015.
‘video & gif memes’ with black background.

No comments:

Post a Comment