Thursday, 18 June 2015

ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) பெறுவது எப்படி?

பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போனாலும் பைக் மற்றும் காரைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. குடும்பத்தில் முக்கிய அங்கமாகிவிட்ட கார் மற்றும் பைக்கை ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் பெறும் வழிமுறைகளை பார்ப்போம்.

பழகுநர் உரிமம்

ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முன் பழகுனர் உரிமம் (Learner’s License Registration) பெற வேண்டும். பழகுனர் உரிமம் பெற்று 30 நாட்களுக்குப் பிறகே ஓட்டுநர் உரிமம் பெற முடியும். பழகுனர் உரிமம் பெற்று180 நாட்களுக்குள் ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும்.

தகுதிகள்

  • 50CCக்கு குறைவான திறனுடைய கியர் இல்லாத மோட்டார் சக்கிள் ஓட்ட பழகுனர் உரிமம் பெற 16 வயது முடிந்து இருக்க வேண்டும்.
  • கியர் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனம் ஓட்ட 18 வயது முடிந்திருக்க வேண்டும்.
  • போக்குவரத்து வாகனங்களை ஓட்ட 20 வயது முடிந்திருக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய படிவங்கள்

LLR விண்ணப்பம் (படிவம்-2) உடன் மருத்துவச் சான்று ( படிவம் – 14) மற்றும் உடல் தகுதிச்சான்று (படிவம்-1) இணைக்க வேண்டும்.

முகவரி

முகவரிக்கான ஆதாரமாக கீழ்க்காணும் ஏதேணும் ஒரு சான்று நகல் இணைக்கப்படல் வேண்டும்.
  • பிறப்புச்சான்று
  • பள்ளிச்சான்று
  • பாஸ்போர்ட்
  • LICபாலிஸி

போட்டோ

விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் அளவு போட்டோ இணைக்கப்படல் வேண்டும். கட்டணம் ரூ.30 (ஒவ்வொரு வகை வாகனத்திற்கும்) + சேவை கட்டணம் ரூ.30.

யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்

வட்டார போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I/II அவர்களிடம் நேரில் ஆஜராகி கொடுக்கப்படல் வேண்டும்.

எத்தனை நாளில் LLR கொடுக்கப்பட வேண்டும்

விண்ணப்பித்த அன்றே LLR சான்றிதழ் கொடுக்கப்பட வேண்டும்.

ஓட்டுநர் உரிமம்

LLR சான்று பெற்று 30 நாட்கள் முடிந்தவர்கள் மட்டுமே ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பம் (படிவம்-4) உடன் வாகனத்தின் பதிவுச்சான்று (RC Book), இன்சூரன்ஸ் சான்று, சாலை வரிச்சான்று, மாசுகட்டுப்பாடு சான்று, போக்குவரத்து வாகனமாக இருந்தால் வாகன தகுதிச்சான்று, சொந்த வாகனம் இல்லையென்றால் வாகன உரிமையாளரின் அனுமதிச்சான்று, மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோ 3 விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
கட்டணம் ரூ.250 (ஒரு வாகனத்திற்கு, பைக் மற்றும் காருக்கு சேர்ந்து எடுத்தால் 250+250 = ரூ.500) இதனுடன் சேவைக்கட்டணம்ரூ.100 கூடுதலாக கட்ட வேண்டும். போக்குவரத்து வாகனங்களுக்கு சேவைகட்டணம் ரூ.50 மட்டும்.

யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்

வட்டார போக்குவரத்து அலுவலர் அல்லது மோட்டார் வாகன ஆய்வாளர் கிரேடு I/II அவர்களிடம் நேரில் ஆஜராகி வாகனத்தை ஓட்டிக் காட்ட வேண்டும்.

எத்தனை நாளில் கொடுக்கப்பட வேண்டும்

வாகனத்தை ஓட்டிக் காட்டி தேர்ச்சி பெற்ற அன்றே ஓட்டுநர் உரிமம் வழ்ங்கப்பட வேண்டும்.
வாகனத்தை ஓட்ட நன்றாக பயிற்சி பெற்றவர்களும் தன்னம்பிக்கை உள்ளவர்களும் லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுநர் உரிமம் பெற்று வருகிறார்கள். நீங்களும் லஞ்சம் கொடுக்காமல் ஓட்டுநர் பெற முயற்சி செய்து முடியாமல் போனால் லோக் சத்தா கட்சி உங்களுக்கு உதவ தயாராக உள்ளது.

No comments:

Post a Comment