Saturday, 15 August 2020

புகழ் பெற்ற வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்' - பொது தகவல்

 புகழ் பெற்ற வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்' - பொது தகவல்

'பொன்னியின் செல்வன்' நாவல் புத்தகத்தின் அட்டைப்படம்

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

கதாபாத்திரங்கள்

1.வல்லவரையன் வந்தியத்தேவன்

2.அருள்மொழி வர்மன் என்கிற இராசராச சோழர்

3.ஆழ்வார்க்கடியான் நம்பி என்கிற திருமலையப்பன்

4.குந்தவை பிராட்டியார்

5.பெரிய பழுவேட்டரையர்

6.நந்தினி

7.சின்ன  பழுவேட்டரையர்

8.ஆதித்த கரிகாலர்

9.சுந்தர சோழர்

10.செம்பியன் மாதேவி

11.கடம்பூர் சம்புவரையர்

12.சேந்தன் அமுதன்

13.பூங்குழலி

14.குடந்தை சோதிடர்

15.வானதி

16.மந்திரவாதி ரவிதாஸன்(பாண்டியனுடைய ஆபத்துதவிகளின் தலைவன்)

17.கந்தமாறன்(சம்புவரையர் மகன்)

18.கொடும்பாளூர் வேளார்

19.மணிமேகலை(சம்புவரையர் மகள்)

20.அநிருத்த பிரம்மராயர்

21.மதுராந்தக சோழர்

கதையின் வரலாற்றுப் பின்னணி

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலகட்டத்தில் வாழ்ந்த நிகழ்கால வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது.

விஜயாலய சோழன்(கி.பி 847 - 871) பல்லவர்களும் பாண்டியர்களும் பலமாக இருந்த காலத்தில் அவர்களை வென்று சோழர்களின் பொற்கால ஆட்சியை தோற்றுவித்த பெருமைக்குரியவர். அவருடைய மகன் ஆதித்த சோழனும் பல்லவர்களையும் கொங்கு நாட்டையும் வென்று விஜயாலய சோழன் தோற்றுவித்த சோழர் பேரரசை விரிவாக்கினார். அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆதித்த சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன்(கி.பி 907 - 955) ஈழத்திலும் பாண்டிய நாட்டிலும் பெற்ற வெற்றிகளே, பிற்காலச் சோழ மன்னர்களின் புகழ்பெற்றவர்கள் இராஜராஜ சோழனுக்கு, இராஜேந்திர சோழனுக்கும், முதலாம் குலோத்துங்க சோழனுக்கு சோழ சாம்ராஜ்ஜியத்தை தென்னிந்தியாவின் முதல் பேரரசாக விரிவுபடுத்த பெரிதும் உதவியது.

முதலாம் பராந்தக சோழன் தன்னுடைய இறப்பிற்கு முன்னால் பெற்ற வெற்றிகளையும் அதனால் விரிவடைந்த சோழ சாம்ராஜ்ஜியத்தைப் பற்றிய விவரங்களும் தெளிவாக கல்வெட்டுக்கள் மூலம் கிடைக்கின்றன. முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் மூன்றாம் கிருஷ்ணன் தலைமையிலான இராஷ்டிரகூடர்களுடனான போரில் சோழ இளவரசன் இராஜாதித்தன் தக்கோலத்தில் இறந்ததோடு மட்டுமல்லாது தொண்டை நாட்டையும் இராஷ்டிரகூடர்கள் தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தனர். இதன் காரணமாக சோழர்களின் அரசின் வட எல்லை தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி அளவிலேயே நின்றது.

இந்தக் காலகட்டத்திற்குப் பிறகான சோழ மன்னர்கள் ஐந்து பேரின் பெயர்கள் தெளிவாகக் கிடைக்கின்றன ஆனால் அவர்களது ஆட்சிக்காலம் அவர்களைப் பற்றிய குறிப்புக்கள் தெளிவாக இல்லை. கண்டராதித்தர், அரிஞ்சய சோழர், இரண்டாம் பராந்தக சோழர், ஆதித்த கரிகாலன், மதுராந்தக சோழர் ஆகிய ஐவரே அந்த சோழ அரசர்கள். இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் கிடைக்கிறது. இதில் ஆதித்த கரிகாலன் இராஷ்டிரகூடர்கள் முதலாம் பராந்தகனின் கடைசிக் காலத்தில் கைப்பற்றிய தொண்டை மண்டலத்தை மீண்டும் போரிட்டு கைப்பற்றினான் என்று தெரிகிறது. இரண்டாம் பராந்தகனின் இறப்பிற்குப் பின்னோ அல்லது ஆதித்த கரிகாலனின் இறப்பிற்குப் பின்னோ சோழ நாட்டில் அடுத்த பட்டத்திற்கான மன்னரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் இருந்திருக்கிறது. ஆதித்த கரிகாலன் கடம்பூரில் கொல்லப்பட்ட இடம் தற்போது மேலக்கடம்பூர் என அழைக்கபடுகிறது.காட்டுமன்னார்கோயில் அருகில்

திருவாலங்காட்டுச் செப்பேடுகள்,

"விண்ணுலகுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான (காணாமற் போனான்) கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளைப் போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகுமாறு அவனுடைய குடிமக்கள் வேண்டினர். ஆனால் க்ஷத்ர தருமத்தை நன்கு அறிந்த அருண்மொழி அரசபதவியை விரும்பவில்லை என்று கூறிவிட்டான். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதை உணர்ந்தமையால் தன் சிற்றப்பன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருண்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.

இந்தக் காலகட்டத்தைத்தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். பொன்னியின் செல்வன் என்பது இராஜராஜ சோழனுக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர்களுள் ஒன்று, அருள்மொழிவர்மருடைய பெயராக கல்வெட்டுக்களில் காணப்படுவது இராஜகேசரி வர்மன் அல்லது மும்முடி சோழ தேவன் என்பது. பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தின் கதாநாயகனாக வாணர் குல வீரன் வல்லவரையன் வந்தியத்தேவனைக் கல்கி அவர்கள் தேர்ந்தெடுத்தார்; வந்தியத்தேவனைப் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் தஞ்சைப் பெரிய கோயில் கிடைக்கின்றன. இராஜராஜ சோழரின் தமக்கையும் வல்லவரையர் வந்தியத்தேவரின் மனைவியுமான ஆழ்வார் பராந்தகை குந்தவையார் என்று கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. கல்கி மேலும் K.A. நீலகண்ட சாஸ்திரியின் சோழர்கள் புத்தகத்தையும், T.V. சதாசிவப் பண்டாரத்தாரின் பிற்காலச் சோழர் சரித்திரத்தையும் மையமாக வைத்து பொன்னியின் செல்வனை எழுதினார். இதில் பிற்காலச் சோழர் சரித்திரத்தில் வந்தியத்தேவனைப் பற்றிய ஐந்து வரிகள் காணப்படுகின்றன. இதனை மையமாக வைத்தே வந்தியத்தேவனை பொன்னியின் செல்வனின் கதாநாயகனாக கல்கி வைத்தார்.

பகுதி 1:புது வெள்ளம்

ஆடித்திருநாள் அத்தியாயம் தொடங்கி மாய மோகினி வரை 57 அத்தியாங்களை உள்ளடக்கியது.முதல் பகுதியான புதுவெள்ளம் சரித்திர புகழ் பெற்ற வீர நாராயண (வீராணம்) ஏரியில் துவங்குகிறது . வடதிசை மாதண்ட நாயகராக திகழும் ஆதித்த கரிகாலர் தனது அன்பு தமக்கைக்கும் , தந்தைக்கும் ஓலை கொடுத்து வர வந்தியத்தேவனை அனுப்புகிறார் . வடதிசையில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் வீரநாராயண ஏரியில் வந்திய தேவன் சென்றுகொண்டிருக்கும் பொது ஆடி திருநாள் கொண்டாட்டத்தை ரசித்தவாறு செல்வதாக முதல் பகுதி துவங்கி , பிறகு செல்லும் வழியில் கடம்பூரில் தாங்கும் பொது சோழ சாம்ராசியத்தின் மணி மகுடத்திற்கு பெரும் சூழ்ச்சி நடப்பதை காண்கிறான் . பிறகு பல தடங்கல்களையும் மீறி சுந்தர சோழரை சந்தித்து ஓலை தந்தவுடன் ஆதித்த காரிகளரின் தமக்கை இளையபிராட்டி குந்தவை தேவியை காண பழையாறை செல்கிறான் . அங்கேயே இளைய பிராட்டியை சந்தித்து அவர் தனது இளைய தம்பியான அருள்மொழி வர்மருக்கு ஓலை கொடுத்து அனுப்ப அதற்காக கடல் பிரயாணம் செய்ய துவங்கும் வரை இப்பகுதி நீள்கிறது .

பகுதி 2:சுழற்காற்று

அத்தியாயம் பூங்குழலியில் ஆரமித்து அபய கீதம் வரை 53 அத்தியாயங்களை உள்ளடக்கியது இரண்டாம் பகுதியான சுழற்காற்று. கோடிக்கரையில் வந்தியத்தேவன் பூங்குழலியை சந்தித்து, ஈழத்திற்கு பூங்குழலியின் படகில் செல்கிறான். ஈழத்திலிருக்கும் இளவரசர் அருள்மொழிவர்மனை சந்தித்து குந்தவை பழையாறைக்கு அவரை அழைத்துக் கொண்டு வர கட்டளையிட்டதை கூறுகிறான். பார்த்திபேந்திரன் காஞ்சிக்கு இளவரசரை ஆதித்த கரிகாலன் அழைத்திருப்பதகாக கூறுகிறான். வந்தியத்தேவனை இளவரசரிடம் அழைத்துவந்த ஆழ்வார்க்கடியான் ஈழத்தில் தங்குவதே சிறந்தது என்று முதல் மந்திரி அநிருத்தர் கூறியதை சொல்கிறான். இதற்கிடையே இளவரசரை சிறைசெய்து அழைத்து செல்ல பழுவேட்டரையர் வீரர்கள் இரண்டு கப்பல்களில் வருகின்றார்கள். அதிலொன்றில் ரவிதாசன், தேவராளனும் தஞ்சைக்கு திரும்புகிறார்கள். இளவரசர் அதில் செல்கிறார் என்று நினைத்து வந்தியத்தேவன் அக்கப்பலில் எதிரிகளிடம் மாட்டிக் கொள்கிறான். அருள்மொழிவர்மன் வந்தியத்தேவனை காப்பாற்ற பார்த்திபேந்தரன் கப்பலில் பின்தொடர்கிறார். இரு கப்பல்களும் பெரும் புயல்காற்றில் மாட்டிக் கொள்கின்றன. கடலில் மிதந்து கொண்டிருக்கும் இளவரசரையும், வந்தியத்தேவனையும் பூங்குழலி காப்பாற்றி கோடிக்கரையின் சதுப்பு நிலக் காட்டில் சேர்க்கின்றாள்.

பகுதி 3:கொலை வாள்

பகுதி 4:மணிமகுடம்

அத்தியாயம் கெடிலக் கரையில் ஆரமித்து படகு நகர்ந்தது! வரை 46அத்தியாயங்களை உள்ளடக்கியது நான்காம் பகுதியான மணிமகுடம். வந்தியதேவன் ஆதித்தர் கடம்பூர் மாளிகைக்கு செல்லவிடாமல் தடுக்க பார்க்கிறான். இருந்தும் இளவரசர் ஆதித்த கரிகாலர், பார்த்திபேந்திர பல்லவன், வந்தியதேவன், கந்தமாறன் ஆகியோர் கடம்பூர் சம்பூவரையன் மாளிகைக்கு வருகிறார்கள். திருகோவிலூர் மலையமான் பாதி தூரம் வரை வந்து வழியனுப்புகிறார். இதே நேரத்தில் தஞ்சாவூரில் முதன்மந்திரி அநிருத்தர், வைத்தியர் மகன் பினாகபாணியின் மூலம் கோடிக்கரையிலிருந்து மந்தாகினி அம்மையாரை பழுவூர் இளையராணியின் பல்லக்கில் கடத்தி வர செய்கிறார். வரும் வழியில் புயலின் காரணமாக பினாகபாணியின் மேல் மரம் ஒன்று முறிந்து விழுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் பூங்குழலி மந்தாகினி அம்மையாருக்கு பதிலாக பல்லக்கில் ஏறிக்கொள்கிறாள். பாண்டிய ஆபத்துதவிகளை பின்தொடர்ந்து மந்தாகினி அம்மையார் பெரிய பழுவேட்டரையரின் நிலவறைக்கு வருகிறாள். மந்தாகினி சக்கரவர்த்தியைப் பார்க்கிறார். அதே நேரத்தில் ஆதித்த கரிகாலர் நந்தினியை பார்க்கிறார்.

பகுதி 5:தியாகச் சிகரம்

அத்தியாயம் மூன்று குரல்களில் ஆரமித்து மலர் உதிர்ந்தது வரை 91அத்தியாயங்களை உள்ளடக்கியது ஐந்தாம் பகுதியான தியாக சிகரம். ராஜராஜா சோழன் அருள்மொழிவர்மன் மக்களின் ஆதரவு தனக்கு இருந்தும் சிம்மாசனத்தை தன் சிற்றப்பனுக்கு வழங்கினான். அருள்மொழிவர்மனின் சரித்திரத்தில் இந்த நிகழ்ச்சி பெரிதும் போற்றப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மையமாக வைத்து இந்த பாகத்தை எழுதியதால் இதற்கு தியாக சிகரம் என பெயர் வைத்ததாய் நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். பெரிய பழுவேட்டரையருக்கு பாண்டிய ஆபத்துதவிகளின் சதித்திட்டம் தெரிய வருகிறது. அவர்கள் ஒரே நாளில் இளவரசர் அருள்மொழிவர்மன், சக்கரவத்தி சுந்தர சோழர் மற்றும் இளவரசர் ஆதித்த கரிகாலர் மூவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இளவரசர் அருள்மொழிவர்மனும், சக்கரவத்தி சுந்தர சோழரும் காப்பாற்றப்படுகின்றனர். சக்கரவத்தி சுந்தர சோழரை காப்பாற்றும் முயற்சியில் மந்தாகினி தேவி உயிரிழக்கிறார். பெரிய பழுவேட்டரையர் வருவதற்குள் இளவரசர் ஆதித்தர் இறந்துவிடுகிறார். பழி வந்தியதேவன் மேல் விழுகிறது. நாட்டு மக்கள், போர் வீரர்கள் அனைவரும் அருள்மொழிவர்மனுக்கு ஆதரவாய் இருக்கின்றனர். அருள்மொழிவர்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. வந்தியதேவன் எப்படி காப்பாற்றப்படுகிறான். அருள்மொழிவர்மர் அரியணை எறுகிறாரா? இவ்வாறு ஐந்தாம் பாகம் செல்கிறது.

முக்கிய பாத்திரங்கள்

வரலாற்றில் முக்கிய இடம்பெறுவோர்

1.வந்தியத் தேவன்

2.குந்தவை

3.அருள்மொழிவர்மன்

4.சுந்தர சோழர்

ஏனைய சில பாத்திரங்கள்

1.நந்தினி - ஆதித்த கரிகாலனை காதலித்தவள், பின் வீரபாண்டியனை காதலிக்கிறாள். ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொன்றபின்பு, பெரிய பழுவேட்டரையரின் மனைவியாகி பழுவூர் இளவரசியாகிறாள். சோழ பேரரசின் பெரும் அரசியாக ஆவதற்காக ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன் ஆகிய மூவரையும் கொலை செய்ய சதி திட்டம் தீட்டுகிறாள். பார்த்தவுடன் மோகம் கொள்ள வைக்கும் அழகுடையவளாக வலம் வருகிறாள்.

2.ஆழ்வார்க்கடியான் நம்பி - கதையின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை பயணிப்பவர். ஆயினும் ஆரம்பத்தில் இக்கதாபாத்திரம் ஒரு சோழ அரசின் ஒற்றன் என்பதை கூறாமல் கதையை நகர்த்தியமை கதைக்கு சுவை ஊட்டுகின்றது.

3.அநிருத்தப் பிரம்மராயர் - சுந்தர சோழரின் முதன் மந்திரியாக இவர் கதையில் இடம் பெறுகிறார்.

4.வானதி - கொடும்பாளுர் இளவரசி வானதி, இளவரசர் அருள்மொழிவர்மரை நேசிக்கும் பெண்ணாக இதில் காட்டப்பட்டிருப்பாள். வானதி அருள்மொழி வர்மரை திருமணம் முடித்த பின் ஒரிரு வருடங்களுக்குள் காலமாகி விட்டார்.

5.பெரிய பழுவேட்டரையர் - இவர் மிகவும் வலிமைமிக்க கதாபாத்திரமாகக் காட்டப்பட்டுள்ளார். இறுதியில் மரணம் அடைவதுமாக மிக்க துக்கம் தருவதாக அமைகிறது.

6.சின்னப் பழுவேட்டரையர் - தஞ்சை நகரத்தின் காவல் அதிகாரியாகவும், சோழர்களின் நல விரும்பியாகவும் இருக்கிறார். பெரிய பழுவேட்டரையரின் மனைவி நந்தினியின் சோழப் பேரரசுக்கு எதிரான சதியை தொடக்கத்திலிருந்தே கடுமையாக எதிர்ப்பவராகவும், பெரிய பழுவேட்டரையரின் மீதான அதீத அன்பினால் அவரை அவ்வப்போது எச்சரிக்கை செய்வதுமாக இருக்கிறார்.

7.செம்பியன் மாதேவி - இவர் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். தில்லைச் சிற்றம்பலத்துக்குப் பொன் கூரை வேய்ந்த பராந்தகச் சோழனின் இரண்டாவது மகன் கண்டராதித்தனின் மனைவியாவர். கி.பி 957ல் கண்டராதித்த சோழன் மரணம் அடைந்த பிறகு மகன்களை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். மேலும் கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 – 1001) வாழ்ந்து ஆறு சோழமாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.

8.ஆதித்த கரிகாலன் - சுந்தர சோழரின் மகனாகவும், அருள்மொழிவர்மன் மற்றும் குந்தவை தேவியின் மூத்த சகோதரராகவும், பட்டத்து இளவரசராகவும் ஆதித்த கரிகாலன் வருகிறார். சிறுவயதிலேயே போர்புரியும் குணம் கொண்டவராகவும், எதிரிகளைத் தன்னந்தனியே எதிர்த்து நிற்கின்ற வீரராகவும், முன்கோபம் கொண்டவராகவும் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

9.மதுராந்தக தேவர்

10.வீரபாண்டியன்

11.பார்த்திபேந்திர பல்லவன்

12.மந்தாகினி

தமிழ்ப் புதின வரலாற்றில் இதன் பங்கு

இந்த நூல் தமிழில் வரலாற்று புதினங்களுக்கு ஒரு முன்னோடியாகவே அமைந்தது. இக்கதையின் முடிவுரையில், கல்கி குறிப்பிட்டு இருப்பது போல், விக்ரமன், சாண்டில்யன் போன்றவர்கள் தமிழ் வரலாற்றை புதினங்களாக்கிக் கொடுக்க முயன்று இருக்கிறார்கள். டாக்டர் எல். கைலாசம் பொன்னியின் செல்வனுக்கு முன் நடந்த நிகழ்வுகளை தனது புதினமான மலர்சோலை மங்கையில் கொடுத்துள்ளார். எனினும் பொன்னியின் செல்வனுக்கு இணையாக இன்று வரை ஒரு புதினமும் சிறப்பாக வரவில்லை என்ற பரவலான அபிப்பிராயம் உள்ளது.

பொன்னியின் செல்வன் பற்றி வைகோ

"உயர்நிலைப்பள்ளியில் மாணவனாக பொன்னியின் செல்வனைப் படித்தாலும், கல்கி ஆசிரியர் மறைந்த பின்னர் மீண்டும் அது இருமுறை தொடர்கதையாகவே அற்புத ஓவியங்களோடு வெளிவந்த காலத்தில் மீண்டும் வாரவாரம் எண்ணற்ற முறையில் படித்து இருக்கிறேன். சோழ நாட்டுக்கு உள்ளே உலவுவதைப்போன்ற அந்த உணர்வை, எந்த எழுத்தாளனாலும் படைக்க முடியாது என்பது என் கருத்து" என்று வைகோ பொன்னியின் செல்வன் திறனாய்வில் குறிப்பிடுகிறார்.

திரைப்படமாக்கும் முயற்சியில் எம்.ஜி.ஆர்

‘பொன்னியின் செல்வன் கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திரைப்படமாக எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். எனினும் முயற்சி கைகூடவில்லை என்று விகடன் இதழ் எம்.ஜி.ஆர் 25 ல் குறிப்பிட்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்

பொன்னியின் செல்வன் இதுவரை மூன்று முறை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர்கள்: இந்திரா நீலமேகம், சிவி கார்த்திக் நாராயணன், பவித்ரா ஸ்ரீநிவாசன்).

வரலாற்று நாவல் 'பொன்னியின் செல்வன்' - பொது தகவல் படங்கள்

'பொன்னியின் செல்வன்' நாவல் புத்தகம், ஐந்து பாகங்கள் - படம்

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் உறவுமுறை படம்

பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களின் உறவுமுறை (ஆங்கிலத்தில்) - படம்

பொன்னியின் செல்வன் நாவல் புத்தக வரைபடம்

பொன்னியின் செல்வன், கதை மாந்தர்கள் - நந்தினியும் (இடது), குந்தவையும்

பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களுடன் கல்கி - கற்பனை வரைபடம்

பொன்னியின் செல்வன் - பொது தகவல் படம் 1

Wednesday, 12 August 2020

LIST OF TAMIL AND INDIAN HISTORICAL MOVIES

LIST OF TAMIL AND INDIAN HISTORICAL MOVIES

The historical drama or period drama is a film genre in which stories are based upon historical events and famous people.

Sl. No

Movie title

Language

Release date

Time period

Notes on setting

1

Karnan

Tamil

14.01.1964

2500 BCE

Life of Karnan

2

Mohenjo Daro

Hindi

12.08.2016

2016 BCE

Life of the ancient Indus Valley civilization and its city Mohenjo-daro

3

Poombukar

Tamil

18.09.1964

270 CE

Life of Kovalan & Madhavi

4

Ezhaam Arivu

Tamil

25.10.2011

5th - 6th century

Life of Bodhidharma

5

Kochadaiyaan

Tamil

23.05.2014

8th century

Life of Kochadaiyaan

6

Raja Raja Sozhan

Tamil

31.03.1973

947 - 1014 CE

Life of Raja Raja Sozhan I

7

Mettukkudi

Tamil

29.08.1996

989 CE

Raja Raja Sozhan’s commander

8

Ambikapathy

Tamil

22.10.1957

1083 CE

The movie story set in the Sozha empire in 1083 CE

9

Dasavatharam

Tamil

03.06.2008

1133 - 1150 CE

The movie story refers Kulathunga Sozhan II

10

Baahubali 1 & 2

Telugu & Tamil

10.07.2015 & 28.04.2017

1225 CE

Life of Amarendra Baahubali & Mahendra Baahubali

11

Aayirathil Oruvan

Tamil

14.01.2010

1279 - 2008 CE

The movie  story about the last Sozha king

12

Padmaavat

Hindi

25.01.2018

13th - 14th century

Life of Rani Padmavati

13

Urumi

Malayalam

31.03.2011

1498 CE

The film is set in the early 16th century, when Portuguese sailors dominated the Indian Ocean.

14

Marakkar: Arabikadalinte Simham

Malayalam

Upcoming movie

1502 - 1600 CE

Life of Kunjali Marakkar IV, defended Portuguese invasion at the Malabar Coast

15

Tenaliraman

Tamil

18.04.2014

1514 - 1575 CE

Life of Tenali Raman

16

Jodhaa Akbar

Hindi

15.02.2008

1542 - 1605 CE

Lige of the Mughal Emperor Jalal-ud-din Muhammad Akbar and the Rajput Princess Jodhaa Bai

17

Mahadheera

Telugu

31.07.2009

1609 CE

Life of warrior Kala Bhairava

18

Bajirao Mastani

Hindi

18.12.2015

1700 - 1740 CE

Life of Maratha Peshwa Bajirao I and his second wife

19

Marudhanayagam

Tamil

Unreleased

1725 - 1764 CE

Life of Maruthanayagam Pillai (Muhammad Yusuf Khan)

20

Kerala Varma Pazhassi Raja

Malayalam

16.10.2009

1753 - 1805 CE

Life of Pazhassi Raja

21

Veera Pandiya Kattabomman

Tamil

16.05.1959

1760 - 1799 CE

Life of Veera Pandiya Kattabomman

22

Imsai Arasan 23aam Pulikesi

Tamil

08.07.2006

1771 - 1796 CE

Life of Imsai Arasan 23aam Pulikesi

23

Mangal Pandey: The Rising

Hindi

12.08.2005

1827 - 1857 CE

Life of Mangal Pandey

24

Kappalottiya Thamizhan

Tamil

07.11.1961

1872 - 1936 CE

Life of V. O. Chidambaram Pillai

25

Bharathi

Tamil

01.09.2000

1882 – 1921 CE

Life of Subramania Bharathi

26

Periyar

Tamil

04.05.2007

1879 - 1973 CE

Life of Periyar E. V. Ramasamy

27

Lingaa

Tamil

12.12.2014

1887 - 1895 CE

The movie story is loosely based on John Penniquick who built Mullaperiyar Dam.

28

Netaji Subhas Chandra Bose: The Forgotten Hero

Hindi

13.05.2005

1897 - 1945 CE

Life of Netaji Subhas Chandra Bose

29

Kamaraj

Tamil

13.02.2004

1903 - 1975 CE

Life of the Indian politician K. Kamaraj

30

The Legend of Bhagat Singh

Hindi

07.06.2002

1907 - 1931 CE

Life of Bhagat Singh

31

Kalapani (Siraichaalai)

Malayalam & Tamil

12.04.1996

1915 CE

The lives of Indian freedom fighters incarcerated in the Cellular Jail in Andaman and Nicobar Islands during the British Raj.

32

Hey Ram

Tamil

18.02.2000

1947 CE

The film depicts India's Partition of Bengal and the assassination of Mahatma Gandhi.

33

Indian

Tamil

09.05.1996

1947 CE

The movie story refers Indian independence movement

34

Madrasapattinam

Tamil

09.07.2010

1947 CE

Life of an Indian Tamil guy and a British during Indian independence movement

35

Kaaviya Thalaivan

Tamil

28.11.2014

Earlier 20th century

The lives of two theatre artistes