Tuesday, 14 April 2020

‎பிரான்ஸ் - சாவெட் குகை ஓவியம்


‎பிரான்ஸ் - சாவெட் குகை ஓவியம்

பிரான்ஸின் தென்கிழக்கு பகுதியான க்ரோட் சாவெட் பகுதியில் பழமையான குகை ஒன்று உள்ளது. இந்த குகையில் ஏராள மான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியங்கள் சுமார் 36 ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்தது என தொல்பொருள் துறையினரால் கண்டறியப் பட்டது. இதன் மூலம் ஐரோப்பாவில் 36 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் தோன்றியதாக ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். எனினும், இந்த குகையில் மனிதன் வாழ்ந்திருக்க வாய்ப் பில்லை என்றும், மதச் சடங்கு களுக்காக இந்த இடத்தை பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

தற்போது இந்த குகை ஓவியங்களை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ஓவியங்கள் அனைத்தும் நலிந்த நிலையில் காணப்படுவதால், இவற்றை பாது காக்கும் வகையில் அந்த பகுதியில் பொதுமக்கள் நுழைய தடைவிதிக்கப் பட்டு உள்ளது.

சாவெட் குகை ஓவியம்-1

சாவெட் குகை ஓவியம்-2

சாவெட் குகை ஓவியம்-3

சாவெட் குகை ஓவியம்-4

சாவெட் குகை ஓவியம்-5

No comments:

Post a Comment