Wednesday, 28 March 2018

உலக மனித உணர்வுகள் ‘இன்பம்’, ‘மன நிறைவு’ - வரையறை


உலக மனித உணர்வுகள்
 இன்பம்’, ‘மன நிறைவு - வரையறை

            இன்பம் (Happiness), மகிழ்ச்சி, ஆனந்தம், சந்தோஷம், சுகம், மன திருப்தி, மன நிறைவு, ஆசை, விருப்பம், பிடித்தல் என்பது வாழ்வின் முதன்மைக் குறிக்கோள்களில் ஒன்று. வாழ்வில் இன்பத்திற்கு புறக் காரணிகள் முக்கிய கூறுகளாக அமைந்தாலும், இன்பம் முதன்மையாக ஒர் அக உறுதிப் பொருளே. இன்பம் உன்னத மகிழ்ச்சி மனநிறைவு கொண்ட ஒர் உணர்ச்சி. இன்பத்தினைச் சிற்றின்பம், பேரின்பம் என இரண்டு வகையாக பண்டைய தமிழ் இலக்கியங்கள் பிரித்துக் குறிப்பிட்டுள்ளன.

            தமிழர் மெய்யியலில், இலக்கியத்தில் அன்பு, அறம், பொருள், இன்பம், வீடு என்ற வாழ்வின் நோக்கங்களில் இன்பம் என்பது இவ்வாறு முதன்மை பெறுவது சுட்டுதற்குரியது.

                மன நிறைவு (Satisfaction or Contentment) என்பது தாம் நினைத்த காரியம் சரிவர செய்தாலோ, இயற்கையாகவே நிகழ்வுகள் எதிர்நோக்கியபடி அமைந்தாலோ உண்டாகும் உணர்ச்சியாகும். இதற்கு மேல் எதுவும் தேவையில்லா நிலையினையும் திருப்தி எனக்கூறலாம்.

            தனக்கென்று குறிக்கோள்களை ஏற்படுத்திக்கொண்டு அவற்றை அடைவது பெரிதும் திருப்தியளிக்கும். தன்னால் இதற்கு மேலும் சாதிக்க இயலும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும். எனவே ஒருவர் தமக்கென்று அடையக்கூடிய குறிக்கோள்களை (ஆனால் எளிதில் அல்ல!) வகுத்துக்கொள்ளுதல் அவசியம், ஏனெனில் அவற்றை அடையப் போராடும் தருணங்களும், அதற்கு வித்திடும் ஆற்றலும் ஒருவருக்கு தேவையான திருப்தியளிக்கும் என்று மனநல வல்லுநர்கள் பகர்கின்றனர்.


உலக மனித உணர்வுகள் இன்பம்’, ‘மன நிறைவு - வரையறை